இசைக் கடவுளின் பக்தர்களுக்கு மிஷ்கினின் சமர்ப்பணம்.. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பின்னணி இசை இலவசம்!
சென்னை: இசைஞானி இளையராஜாவின் மெய் பிளஸ் மனம் நெகிழ வைக்கும் பின்னணி இசையை அவரது ரசிகர்களுக்காக இலவசமாக டவுன்லோடு செய்யும் உரிமையைக் கொடுத்துள்ளார் இயக்குநர் மிஷ்கின்.
மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டிருக்கும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் பின்னணி இசையைத்தான் இலவசமாக இப்படிக் கொடுத்துள்ளார் மிஷ்கின்.
இசைஞானியின் ரசிகர்களின் பாராட்டுக்களுக்காக இந்த பிரத்யேக பரிசைக் கொடுத்துள்ளாராம் மிஷ்கின்.

நெகிழ வைக்கும் இசை
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் இளையராஜா பாடல்கள் போடவில்லை. ஆனால் மனதுக்குள் நெகிழ்ச்சியைக் கொடுக்கும் அட்டகாசமான பின்னணி இசையில் மிரட்டியுள்ளார்.

ரசிகர்களுக்கு மரியாதை
இந்த பின்னணி இசை டிராக்குகளை தற்போது ராஜாவின் ரசிகர்களுக்காக இலவசமாக டவுன்லோடு செய்யும் வசதியை உரிமையை அளித்துள்ளார் மிஷ்கின்.

10 டிராக்குகள்
மொத்தம் 10 பின்னணி இசை டிராக்குகளை ரசிகர்கள் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ள முடியும். இந்த வசதியைப் பெற மிஷ்கினின் http://www.lonewolfproductions.in/ என்ற இணையதளத்திற்குப் போய் டவுன்லோட் செய்யலாம்.

இசையை நேசிக்கும் அனைவருக்கும்
இதுகுறித்து மிஷ்கின், இளையராஜாவின் இந்த ஒரிஜினல் பின்னணி இசையை, இசையை நேசிக்கும் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த இசை வடிவம் எம்.பி.3 வடிவில் உள்ளது.

இன்னொரு இணையதளம் சிடி வடிவில் தருகிறது
அதேபோல www.600024.com என்ற இகாமர்ஸ் இணையதளமும் இந்த பத்து இசை வடிவத்தையும் சிடியில் போட்டு இலவசமாகவே அனுப்பி வைக்கிறது. கூரியர் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும் என்றும் அது அறிவித்துள்ளது.

மீண்டும் மீண்டும்
ஓநாயும் படத்தின் பின்னணி இசை குறித்து மிஷ்கின் கூறுகையில், இந்த இசைக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது நான் எதிர்பார்த்தது. இதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதை அனைவருடனும் பகிர விரும்பியே இப்படி இலவசமாக டவுன்லோட் செய்யும் வசதியைக் கொடுத்துள்ளேன். அனைவருமே இளையராஜாவின் பின்னணி இசை அருமையாக இருப்பதாக பாராட்டுகிறார்கள். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் விதமாக இது உள்ளதாகவும் பாராட்டுகிறார்கள். மிகவும் புனிதமான இசை இளையராஜாவுடையது. இதை அனைவரும் உணர்ந்து அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.

ராஜா இசையை வைத்து காசு பார்க்க விரும்பவில்லை
மேலும் அவர் கூறுகையில், இளையராஜா சாரின் இசையை வைத்து பணம் பார்க்க நான் விரும்பவில்லை. எதிர்காலத்தில் அவர் எனக்காக எந்த மாதிரியான இசை வடிவத்தைக் கொடுத்தாலும் அதை நான் உலகுக்கு இலவசமாக பகிர்ந்து கொடுக்கப் போகிறேன் என்றார் நெகிழ்ச்சியுடன்.
கிரேட்....


Click it and Unblock the Notifications











