கோட் சூட் போட்டுக் குத்தாட்டம் போடும் அஸ்வின்.. அடுத்த ஹிட் ஆல்பம் ’யாத்தி யாத்தி’ ரிலீஸ்!
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வினின் அடுத்த ஹிட் ஆல்பமான 'யாத்தி யாத்தி' பாடல் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
குட்டி பட்டாஸ், அடிபொலி பாடல்களை தொடர்ந்து அடுத்த சூப்பர் ஹிட் ஆல்பம் பாடலில் ஆடி பாடி அசத்தி உள்ளார் அஸ்வின்.
சோனி மியூசிக் சவுத்தில் வெளியான இந்த பாடலில் அஸ்வின் உடன் இணைந்து ஹர்ஷதா விஜய் நடனமாடியுள்ளார்.

ஆல்பம் ஸ்பெஷலிஸ்ட்
குக் வித் கோமாளி அஸ்வின் ஆல்பம் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறியுள்ளார். இவர் ஆடி பாடி அசத்திய குட்டி பட்டாஸ் ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அடுத்ததாக அடிபொலி ஆல்பத்தை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், அடுத்த ஆல்பத்தை வெளியிட்டுள்ளார் அஸ்வின்.

யாத்தி யாத்தி
அஸ்வின் மற்றும் ஹர்ஷதா விஜய் நடிப்பில் செம பெப்பியான திருமண ஆல்பம் பாடலாக உருவாகி உள்ளது இந்த "யாத்தி யாத்தி" பாடல். குட்டி பட்டாஸ் பாடல் திருமண பேக்ரவுண்டில் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த பாடலில் அஸ்வின் மாப்பிள்ளை கோலத்திலேயே மாஸ் காட்டி உள்ளார்.

கெளதம் ஜார்ஜ்
இந்த அட்டகாசமான யாத்தி யாத்தி பாடலை ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளவர் கெளதம் ஜார்ஜ். மேலும், இந்த பாடலுக்கு அசத்தலான இசையை அபிஷேக் சி எஸ் என்பவர் உருவாக்கி உள்ளார். நடன இயக்குநர் ஸ்ரீதர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். அனுராதா ஸ்ரீராம், யாசின் நிஸார், அபிஷேக் சிஎஸ் இணைந்து இந்த பாடலை பாடி உள்ளனர்.

தெறிக்கும் டிரெண்டிங்
ஒரு லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்களை போட்டு ஆயுத பூஜை ரிலீஸாக வெளியாகி உள்ள யாத்தி யாத்தி பாடலை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர் குக் வித் கோமாளி அஸ்வின் ரசிகர்கள். என்ன சொல்ல போகிறாய் மற்றும் இன்னொரு படம் என இரு படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அஸ்வின் ஆல்பம் பாடல்களிலும் ஹீரோவாக அசத்தி வருகிறார்.
கோட் சூட்டில் குத்தாட்டம்
கோட் சூட் போட்டுக் கொண்டு பாடலின் கடைசியில் அஸ்வின் போடும் குத்தாட்டம் போர்ஷன் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. பண்டிகை காலத்திற்கான சிறப்பான குத்தாட்ட பாடல் என்றும் திருமண விழாக்களில் எல்லாம் இனி யாத்தி யாத்தி பாடல் ஒலிக்கும் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











