அதர்வாவின் அழகான நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படம்... லிரிக் வீடியோ வெளியானது

சென்னை : நடிகர் அதர்வா ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் குருதி ஆட்டம்.

இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் தற்போது படத்தின் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் தனது அமைதியான மற்றும் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அதர்வா.

குருதி ஆட்டம் படம்

குருதி ஆட்டம் படம்

நடிகர் அதர்வா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாக உள்ள படம் குருதி ஆட்டம். இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. முன்னதாக இவர் 8 தோட்டாக்கள் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இயக்குனர் ஸ்ரீ கணேஷ்

இயக்குனர் ஸ்ரீ கணேஷ்

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 8 தோட்டாக்கள் படத்தில் எம் எஸ் பாஸ்கர், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்த படம் சிறப்பான விமர்சனங்களை அவருக்கு பெற்று தந்தது. இந்த படத்திற்கு பிறகு தற்போது அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

யுவன் இசை

யுவன் இசை

இந்தப் படத்தில் அதர்வாவிற்கு பிரியா பவானி சங்கர் ஜோடி ஆகியுள்ளார். யுவன்சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த மாதம் 25ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவு பெற்றாலும் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது போஸ்டருடன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

படத்தின் மெலடி பாடல் வெளியீடு

படத்தின் மெலடி பாடல் வெளியீடு

ரிலீஸ் தேதி தற்போது உறுதியாகியுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு முடுக்கி விட்டுள்ளது. படத்தின் டீசர், டிரைலர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் தற்போது படத்தின் மெலடி பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.

அழகான மெலடி பாடல்

அழகான மெலடி பாடல்

பாடலின் வரிகளை கார்த்திக் நேதா எழுதியுள்ள நிலையில் பாடலை அழகான முறையில் பாடியுள்ளார் ஸ்ரீராம் பார்த்தசாரதி. யுவனின் இசையில் பாடல் அழகான மெலடி அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

இந்த படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதர்வாவின் சாக்லேட் பாய் லுக்கை இந்தப் படம் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X