twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பச்சிகளாம் பறவைகளாம்… பேச்சிலர் படத்தின் சிறப்பான பாடல் வெளியீடு

    |

    சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பு மற்றும் இசையில் உருவாகியுள்ள படம் பேச்சுலர்.

    படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

    இந்தப் படத்தின் லிரிக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

     செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே... சேலையில் வருடும் ஆத்மிகா! செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே... சேலையில் வருடும் ஆத்மிகா!

    நடிகர் ஜிவி பிரகாஷ்

    நடிகர் ஜிவி பிரகாஷ்

    நடிகர் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்து நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ள படம் பேச்சுலர். இந்தப் படத்தின் இசையமைப்பையும் அவரே மேற்கொண்டுள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் திவ்யபாரதி. அறிமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் சிறப்பான வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

    டில்லிபாபு தயாரிப்பு

    டில்லிபாபு தயாரிப்பு

    படத்தை டில்லிபாபு தயாரித்துள்ள நிலையில் நீண்ட நாட்களாக கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் தற்போது படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் கிராமத்து இளைஞன் மற்றும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்பவர் என இருவேறு வித்தியாசமான கெட்டப்புகளில் ஜிவி காணப்படுகிறார்.

    லிரிக் வீடியோ பாடல்

    லிரிக் வீடியோ பாடல்

    படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் பச்சிகளாம் பறவைகளாம் என்ற லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. நாட்டுப்புற தெம்மாங்கு பாணியில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. மிகவும் சிறப்பான வகையில் காதிற்கு இனிமை சேர்க்கும் வகையில் பாடல் அமைந்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    பாரம்பரிய கும்மிப்பாடல்

    பாரம்பரிய கும்மிப்பாடல்

    லிரிக் வீடியோவாக அமைந்திருந்தாலும் பாரம்பரிய கும்மி பாடலான இந்தப் பாடல் சலங்கை உள்ளிட்ட காட்சிகளை கொண்டுள்ளது சிறப்பாக காணப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இந்தப் பாடலை மிகவும் சிறப்பாக அமைத்துள்ளார். ஆயினும் படத்தில் காட்சிகளுடன் இந்தப் பாடலை காண்பது மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

    ஐடி நிறுவன இளைஞன்

    ஐடி நிறுவன இளைஞன்

    பெங்களூருவில் ஐடி வேலை கிடைத்து செல்லும் இளைஞனும் அவனுக்கான காதலும் குறித்த கதைக்களத்தை இந்தப் படம் கொண்டுள்ள நிலையில், இந்த பாடல் எந்த சூழலில் அமைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படம் இளைஞர்களுக்கான படமாக அமைந்துள்ளதாக தெரிகிறது.

    புதிய பாதையை அமைக்கும்

    புதிய பாதையை அமைக்கும்

    இந்தப் படம் திரையுலகில் ஒரு புதிய பாதையை அமைக்கும் என்று நடிகர் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தான் வித்தியாசமான கதைக்களத்தில் வித்தியாசமான நடிப்பை இந்தப் படத்தின்மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Recommended Video

    GV Prakash ஜோடி Divya Bharathi கண்கலங்கியது ஏன் ? | Bachelor | Filmibeat Tamil
    ஜிவியின் அடுத்தடுத்த படங்கள்

    ஜிவியின் அடுத்தடுத்த படங்கள்

    ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்த படங்களில் நடித்தும் இசையமைத்தும் வருகிறார். தான் நடிக்கும் படங்களுக்கு தானே இசையமைப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் அதிகமான வெற்றிப் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் பாடல் பாரம்பரியமான முறையில் வெளியாகியுள்ளது.

    English summary
    GV Prakash’s Bachelor movie lyric video song released
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X