»   »  மார்ச் 26-ம் தேதி ‘பாகுபலி 2’ இசை வெளியீடு!

மார்ச் 26-ம் தேதி ‘பாகுபலி 2’ இசை வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரையுலகமே ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கும் பாகுபலி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 26-ம் தேதி ஹைதராபாதில் நடக்கிறது.

ராஜமெளலி இயக்கியிருக்கும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.

Bahubali 2 audio to be released in March 26

சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல சாதனைகளையும் படைத்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டை மிக பிரம்மாண்டமாக நடத்த படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஹைதராபாதில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மிகவும் பிரம்மாண்டமாக செட் அமைத்து இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.

இப்படத்தின் ஆடியோ உரிமையை 4.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளது லஹரி நிறுவனம்.

தமிழ்ப் பதிப்புக்கான இசை வெளியீட்டு விழா தனியாக நடக்கும் என்று தெரிகிறது.

English summary
The Audio launch of Bahubali 2 will be held at Hyderabad Ramoji Rao film city on March 26th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil