விஜய்யின் பைரவா இசை வெளியீடு ஒத்திவைப்பு: காரணம் வர்தாவா?
சென்னை: விஜய்யின் பைரவா படத்தின் இசை வெளியீட்டு விழா தள்ளிப்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் விருந்தாக ரிலீஸாகிறது. படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. முன்பு பரதன் இயக்கத்தில் வெளியான அழகிய தமிழ் மகன் படத்திலும் விஜய் இரட்டை வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து தமிழக மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளதால் பைரவா இசை வெளியீட்டு விழாவை மிகவும் எளிமையாக நடத்த விஜய் முடிவு செய்தார்.
இசை வெளியீட்டு விழா வரும் 17ம் தேதி நடப்பதாக இருந்தது. இந்நிலையில் விழா டிசம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
பைரவா படத்திற்கு கபாலி புகழ் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











