என்னைப் பழி வாங்கத் திட்டம் போட்டிருக்கிறார் விஷால்! - பாலா
சென்னை: இயக்குநர் திருவும் நடிகர் விஷாலும் என்னைப் பழி வாங்கத் திட்டம் போட்ட மாதிரி தெரியுது, என்றார் இயக்குநர் பாலா
நான் சிகப்பு மனிதன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசையை வெளியிட்டார் பாலா.

பாலா
பின்னர் அவர் பேசுகையில், "நான் சிகப்பு மனிதன்' திரைப்படத்தின் ஹீரோ எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறார்.
எனக்கென்னவோ இது என்னை பழிவாங்க விஷாலும், திருவும் இணைந்து யோசித்த திட்டம் என்றே தோன்றுகிறது.

தூங்கிட்டே இருப்பேன்
நான்தான் எப்பொழுதும் தூங்கிக்கொண்டே இருப்பேன். காலையில் ஷூட்டிங்கிற்கு ஸ்பாட்டிற்கே 11 மணிக்குத் தான் செல்வேன்.
இரவு 7.30 மணிக்கு ஷூட்டிங் என்றால் விடியற்காலைக்கு சற்று முன்பு தான் செல்வேன்," என்றார்.

விஷால் பதில்
இதற்கு பதிலளித்து விஷால் பேசியபோது, "இயக்குனர் பாலாவுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவன் - இவன் படத்தில் நடித்த சமயத்தில் நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.

ஹீரோயினாக வாழ்ந்தேன்
நான் இரண்டு ஹீரோக்களில் ஒருவனாக நடித்தேன் என்பதை விட 17 நாட்கள் ஒரு ஹீரோயினாக வாழ்ந்தேன் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் எதுவும் தெரியாவிட்டாலும் நாளாக நாளாக நான் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டேன்.

தலை வணங்குகிறேன்
ஷூட்டிங்கின் போது கொஞ்சம் கிளாமராக தெரியவேண்டும் என்று கேமராமேன் சில கரெக்ஷன் செய்யச் சொன்னபோது, நடிகைகள் இந்த சமயத்தில் எப்படி உணர்கிறார்கள் என்பதை மனமாற உணர்ந்தேன். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகளுக்கும் சரி, முன்பு நடித்த நடிகைகளுக்கும் சரி... அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்," என்று கையெடுத்துக் கும்பிட்டார்.


Click it and Unblock the Notifications











