கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

பாலா இயக்கத்தில் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ள அவன்-இவன் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசும்போது இவ்வாறு கூறினார்.
இசைத்தகடை வெளியிட்டு பாலுமகேந்திரா பேசுகையில், "பாலாவும், நா.முத்துக்குமாரும் என் சிஷ்யர்கள். என் பிள்ளைகள். பாலா என் மூத்த மகன். அவனுக்கு நான் ரசிகன். விஷால், நல்ல நடிகர். அவருடைய நிறம் எனக்கு பிடிக்கும்.
பொதுவாகவே எனக்கு கறுத்த ஆண்களையும், கறுத்த பெண்களையும் ரொம்ப பிடிக்கும். கறுப்புதான் அழகு. கறுப்பு மீது எனக்கு காதல் உண்டு.
என் கதாநாயகி அம்பிகா இங்கே இருக்கிறார். அவரை என் கதாநாயகி என்று குறிப்பிடுவதில் தப்பு இல்லை. என் டைரக்ஷனில், 'ஓளங்கள்' என்ற படத்தில் அம்பிகா நடித்துள்ளார். பிரபா இங்கே பேசும்போது, என்னை பெரியவர் என்று குறிப்பிட்டார். நான் வயதானவன் அல்ல. எனக்கு இருபத்தாறு வயதுதான் ஆகிறது. எல்லோரும் கறுப்பு டை அடித்துக்கொள்வார்கள். நான், வெள்ளை டை அடித்துக்கொள்கிறேன்.
யுவனை சின்ன குழந்தையிலிருந்து நான் பார்த்து வருகிறேன். அப்போதெல்லாம் சிரிக்கவே மாட்டார். இன்றோ அவர் இசைக்கு இந்த உலகமே ஆனந்தமாக நடனமாடுவதைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது,'' என்றார்.
நடிகர் விஷால் பேசுகையில், சக நடிகரும் நண்பருமான ஆர்யாவை வாரினார்!
அவர் பேசுகையில், "அவன்-இவன் படத்தில் நான் நடிப்பதற்கு காரணம், ஆர்யாதான். அவனுக்குத்தான் நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். எனக்குள் ஒரு பசி இருந்தது. ஏதாவது வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்ற பசி. நான் கடவுள் படம் பார்த்துவிட்டு, இது மாதிரி நாமும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
சத்யஜித்ரேயும் சத்யஜோதி பிலிம்ஸும்...
இந்த படத்தில் ஒரு காட்சியை பார்த்துவிட்டு, 'சத்யஜித்ரே படம் மாதிரி இருக்கிறது' என்று ஆர்யாவிடம் சொன்னேன். உடனே அவன், 'பாணா காத்தாடிக்கும் நம்ம படத்துக்கும் என்ன சம்பந்தம் மச்சான்?' என்று அப்பாவியாகக் கேட்டான். 'நான் பாணா காத்தாடி பற்றி நான் சொல்லவில்லையே' என்றேன். சத்யஜோதி தியாகராஜன் பத்தி சொன்னியேடா என்றான் மீண்டும்.
டேய், அது சத்யஜோதி தியாகராஜன் அல்ல. சத்யஜித்ரே. அவர் பெரிய இயக்குநர் என்று நான் விளக்க வேண்டி வந்தது! ஆர்யாவுக்கு அவ்வளவு பொது அறிவு. அவன் கடைசியாக பார்த்த தலைவர் (ரஜினிகாந்த்) படம், தளபதி. இது ஒண்ணு போதாதா, அவன் எந்த அளவுக்கு அப்டேட்டா இருக்கான்னு புரிஞ்சிக்க," என்று கலாட்டா செய்தார்.
தலைவர் படம் ஒண்ணுகூட நான் மிஸ் பண்ணதில்லை. எந்திரன் வரைக்கும் பார்த்துட்டேன்டா, என்று பின்னர் ஆர்யா குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











