பிரபல பாடகர் பென்னி தயாளின் 'வாழ்க்கை'!

இஎம்ஐ நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆல்பத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
கிறிஸ்டோபர் பிரதீப் பாடல்களை எழுதியுள்ளார். மொத்தம் ஆறு பாடல்கள். ஆறுமே ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆல்பம் தொடர்பாக பென்னி தயாள் கூறுகையில், "நான்கு ஆண்டுகளுக்கு முன்பே சார்லஸ் பாஸ்கர் இந்த ஐடியாவைச் சொன்னார். அப்போது நான் அதற்கு தயாராக இல்லை. சமீப காலமாக தொடர்ந்து அதிக பாடல்களைப் பாடி ஓரளவு அனுபவம் பெற்ற பிறகுதான், இந்த ஆல்பத்தைச் செய்யும் துணிச்சல் வந்தது," என்றார்.
இந்த ஆல்பத்தின் 4 பாடல்களை லண்டனில் பதிவு செய்யப்பட்டன. இரண்டு மட்டும் சென்னையில்.
Comments


Click it and Unblock the Notifications