கொலைவெறியுடன் ராணாவை தேடும் பவன் கல்யாண்... வெளியானது "பீம்லா நாயக்" படத்தின் முன்னோட்டம்!

ஹைதராபாத் : மலையாளத்தில் பிரித்விராஜ்,பிஜு மேனன் ஆகியோரின் அட்டகாசமான நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படம் இப்போது தெலுங்கில் உருவாகி வர பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் ராணாவும் பிஜுமேனன் கதாபாத்திரத்தில் நடிகர் பவன் கல்யாணும் நடிக்கின்றனர்.

சாகர் கே சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கிற்கு பீம்லா நாயக் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்போது அதன் வெறித்தனமான முன்னோட்டம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

அய்யப்பனும் கோஷியும்

அய்யப்பனும் கோஷியும்

த்ரிஷ்யம் திரைப்படம் இந்தியாவில் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இயக்குனர் சாச்சி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் பிஜூ மேனன் ஆகியோரின் அசத்தல் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்திருந்தது இதனை அடுத்து இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது என்ற பேச்சுக்கள் அப்பொழுது அடிபட்டது. தெலுங்கு படத்தின் வேலைகள் தடபுடலாக ஆரம்பித்து நடைபெற்று கொண்டுள்ளது. மிக சாதாரணமான பழிவாங்கும் கதைதான் என்றாலும் திரைக்கதையில் காட்ட இருந்த சுவாரஸ்யம் படத்தின் வெற்றியை மேலும் தூக்கி பிடித்துள்ளது. அய்யப்பனும் கோஷியும் படத்தில் பிருத்விராஜ் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். பிஜு மேனன் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மதுவுக்கு அடிமையான பிரித்விராஜ் ஒரு முறை போலீஸ் சோதனையின் போது காரில் வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்ய அப்பொழுது போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் பிரித்விராஜ்க்கும் இந்தப் போலீஸ் ஸ்டேஷனில் பிரித்விராஜை விசாரிக்கும் பிஜு மேனனுக்கும் ஒரு கட்டத்தில் சிறு மோதல் ஏற்பட அந்த மோதல் பின் பழி வாங்கும் நோக்கில் செல்கிறது.

நேர்மையான போலீஸ் அதிகாரி

நேர்மையான போலீஸ் அதிகாரி

இரண்டு வெவ்வேறு அதிகார துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் இடையே ஈகோ மோதல் ஏற்பட்டால் அது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மிக தத்ரூபமாக காட்டியிருந்த இந்த திரைப்படம் இப்பொழுதே தெலுங்கில் பீம்லா நாயக் என்ற பெயரில் உருவாகிறது. இதில் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் ராணா நடிக்க, பிஜு மேனன் கதாபாத்திரத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகர் பவன் கல்யாண் நடிக்கிறார். லாக்டவுனுக்கு பிறகு சமீபத்தில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்த படத்தை இயக்குனர் சாகர் கே சந்திரா இயக்குகிறார். தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் திரிவிக்ரம் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார். பவன் கல்யாணுக்கு ஜோடியாக முதலில் சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார் ஆனால் படப்பிடிப்பு சொன்ன தேதியில் நடக்காமல் தேதி தள்ளிப் போனதன் காரணமாக சரியாக தேதி ஒதுக்க முடியாததால் சாய்பல்லவி இப்படத்திலிருந்து விலக இப்பொழுது நடிகை நித்யா மேனன் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ராணாவுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கொலைவெறியுடன்

கொலைவெறியுடன்

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பீம்லா நாயக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணைய தளத்தை தெறிக்கவிட்டது. இதைத்தொடர்ந்து இப்பொழுது பீம்லா நாயக் படத்தின் மிரட்டலான முன்னோட்டம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் உள்ளது. ராணாவின் கதாபாத்திரத்தின் பெயர் டேனியல் சேகர் என வைக்கப்பட்டிருக்க நடிகர் பவன் கல்யாண் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு ராணாவை தேடி கொலைவெறியுடன் அவரின் வீட்டிற்கே சென்று அங்குள்ள அடியாட்களை அடித்து துவைக்கிறார். பொதுவாகவே பவன் கல்யாண் திரைப்படங்கள் என்றாலே ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது அதே போல பீம்லா நாயக் படமும் ஆக்ஷனுக்கு பஞ்சம் இல்லாமல் உருவாகியிருக்க ஆரம்பமே அமர்க்களமாக முன்னோட்ட த்தில் ஆக்சன் காட்சிகளை வைத்து தெறிக்க விட்டுள்ளனர் . இப்படத்தை சூர்யா தேவர நாகவம்சி சார்பாக சித்தாரா என்டர்டைன்மென்ட்ஸ் தயாரித்து வருகிறது.

ட்ரெண்டிங்கில் முன்னணியில்

ட்ரெண்டிங்கில் முன்னணியில்

சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு சமீபத்தில் மட்டுமே தொடங்கியதால் இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 12ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இசையமைப்பாளர் தமனின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியாகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள பீம்லா நாயக் படத்தின் முன்னோட்டத்தை ரசிகர்கள் கொண்டாடி வர இப்பொழுது யூட்யூப் தளத்தில் ட்ரெண்டிங்கில் முன்னணியில் உள்ளது. நம்பத்தகுந்த வகையில் ரியாலிட்டியாக இருக்க வேண்டும் என விரும்பும் மலையாள ரசிகர்களின் ரசனைக்கேற்ப அய்யப்பனும் கோஷியும் வெளியானது. அதே கதைதான் என்றாலும் தெலுங்கு ரசிகர்களின் ரசனைக்கேற்ப காட்சிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அதிரடியான மசாலாக்கள் கமர்சியல் காட்சிகள் பலவற்றை இதில் சேர்க்க படக்குழு முடிவு செய்துள்ளது. விறுவிறு வேகத்தில் நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பை இந்த மாத இறுதிக்குள் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X