பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா படத்தில் இடம்பெற்ற ஐட்டம் நம்பர்.. ஜிவி பிரகாஷ் வெளியிட்டு வாழ்த்து!

சென்னை: ஜாஸ்பர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அழகியடா நண்பா பாடலை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்.

இயக்குநர் யுவராஜ் இயக்கத்தில் விவேக் ராஜகோபால், பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது.

சினிமா உலகில் சமீப காலமாக குறைந்திருந்த ஐட்டம் பாடல்கள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து இருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளன.

ஜாஸ்பர்

ஜாஸ்பர்

இயக்குநர் யுவராஜ் இயக்கத்தில் விவேக் ராஜகோபால், பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா மற்றும் மாஸ்டர் உமர் நடிப்பில் உருவாகி உள்ள கிரைம் த்ரில்லர் படமான ஜாஸ்பர் படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் நம்பர் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஐட்டம் பாடல்

ஐட்டம் பாடல்

சமந்தாவின் ஊ சொல்றியா ஐட்டம் நம்பர் பாடலை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் படத்துக்கு ஒரு ஐட்டம் நம்பர் இடம்பெறும் என தெரிகிறது. ஜாஸ்பர் படத்தில் பாலிவுட் நடிகை பாலக் சிங் கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார். அழகியடா நண்பா என தொடங்கும் இந்த பாடலுக்கு குமரன் சிவமணி இசையமைத்துள்ளார்.

பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் பிரபலம்

பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராட்சசன் படம் போல கிஃப்ட் பாக்ஸில் விரல் எல்லாம் வைத்து அனுப்பி வில்லன் டீம் மிரட்டும் காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளன.

ஜிவி பிரகாஷ் வாழ்த்து

ஜிவி பிரகாஷ் வாழ்த்து

அழகியடா நண்பா பாடலை தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ், ஜாஸ்பர் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், பாடலின் இசை அருமையாக உள்ளது என்றும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும் மனமார பாராட்டி உள்ளார்.

பாலக் சிங்

பாலக் சிங்

பாலிவுட்டில் கண்டி பாத், சத்யமேவ ஜயதே 2 உள்ளிட்டவற்றில் நடித்துள்ள பாலிவுட் நடிகை மற்றும் மாடல் அழகியான பாலக் சிங் இந்த படத்தில் கிளாமர் குத்தாட்டம் போட்டுள்ளார். சன்னி லியோன் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வரும் நிலையில், பாலக் சிங்கின் நடனம் வேற லெவலில் அசத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X