twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்படியே இருந்தா நல்லா இருக்கும்.. பாராட்டும் பொதுமக்கள்.. சொன்னபடி செய்த விஜய் ரசிகர்கள்!

    நடிகர் விஜயின் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக சென்னையில் எங்கும் பேனர் வைக்கப்படவில்லை.

    |

    Recommended Video

    Bigil audio launch|சொன்னபடி செய்து காட்டிய விஜய் ரசிகர்கள்... பாராட்டிய பொதுமக்கள்

    சென்னை: நடிகர் விஜயின் பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக சென்னையில் எங்கும் பேனர் வைக்கப்படவில்லை.

    பொதுவாக நடிகர்கள் அஜித், விஜய் ரசிகர்கள் இடையே பேனர் வைப்பதில் பெரிய போட்டி நிலவும். இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் பெரிய பெரிய பேனர்கள் வைத்து போட்டியிட்டு உள்ளனர்.

    யார் பெரிய பேனர் வைப்பது. யார் வித்தியாசமான பேனர் வைப்பது. யார் நீளமாக பேனர் வைப்பது என்று போட்டி நடக்கும். இது சமயங்களில் பெரிய அளவில் சண்டையில் கூட முடிந்துள்ளது.

    என்ன

    என்ன

    அதேபோல் கடைசியாக மெர்சல், சர்க்கார், தெறி படங்களுக்கு அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டது. முக்கியமாக சர்க்கார் படத்திற்கு விஜயே எதிர்பார்க்காத அளவிற்கு அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டது. ஆடியோ விழாவிற்கே சாய் ராம் கல்லூரி அருகே 400 பேனர்கள் வரை வைக்கப்பட்டது.

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    ஆனால் சென்னையில் சாலை விபத்தில் பலியான சுபஸ்ரீ மரணம் அனைத்தையும் புரட்டி போட்டுள்ளது. சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் பைக்கில் செல்லும் போது மேலே விழுந்து சுபஸ்ரீ விபத்திற்கு உள்ளானார்.கட் அவுட் முகத்தில் விழுந்ததால் தடுமாறிய சுபஸ்ரீ, லாரி மீது மோதி பலியானார்.பள்ளிக்கரணையில் இந்த சம்பவம் நடைபெற்றது.

    விஜய் எப்படி

    விஜய் எப்படி

    இதையடுத்து விஜய் தனது ரசிகர்களிடம் இனிமேல் பேனர் வைக்க கூடாது என்று கூறினார். தேவையில்லாமல் பேனர் வைக்க வேண்டாம். பேனர் வைப்பதை முற்றிலும் தவிர்ப்போம் என்று அவர் தனது ரசிகர் மன்றங்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி இருந்தார்.

    பிகில்

    பிகில்

    இந்த நிலையில் தற்போது பிகில் இசை வெளியீட்டு விழா நடக்கும் சாய் ராம் கல்லூரி பகுதியில் ஒரு பேனர் கூட வைக்கப்படவில்லை. விஜய் பேச்சை கேட்டு ஒரு பேனர் கூட அங்கு வைக்கப்படவில்லை. விழா நடக்கும் வாசலில் ஒரே ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் விழா நடக்கிறது என்பதை அறிவிக்கும் மிக சிறிய பேனர் ஆகும்.

    இல்லை

    இல்லை

    மற்றபடி சாலையில் எங்கும் பேனர் இல்லை. போஸ்டர்களும் மிகவும் குறைவாகவே இருந்தது. இதற்கு பதிலாக சமூக வலைத்தளங்களில் ஆன்லைன் மூலம் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக பிரச்சாரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களும் விஜய் ரசிகர்களின் இந்த முடிவை பாராட்டி வருகிறார்கள்.

    English summary
    BIGIL Audio launch: Vijay fans avoided banner after Subhasree's tragic death.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X