19ம் தேதி பெரிய ‘பிகில்’ ஊதலாம்.. விஜய் என்ன பேசப் போகிறார்.. செம ஆர்வத்தில் தளபதி ரசிகர்கள்!
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது.
Recommended Video
சென்னை: செப்டம்பர் 19ம் தேதி பிகில் படத்தின் இசை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பிகில். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு, ஜாக்கி ஷெரஃப் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
பிகில் படத்தை தயாரிப்பது ஏஜிஎஸ் நிறுவனம். இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் அந்நிறுவனத்தின் உரிமையாளர் அர்ச்சனா கல்பாதி டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை கொடுத்து விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் அவர்.
பிகில் இசை வெளியீடு
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ம் தேதி நடைபெறும் என அர்ச்சனா கல்பாதி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், "ஒவ்வொரு ஆண்டும் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக நான் காத்திருப்பேன். விஜய்யின் பேச்சை கேட்க வேண்டும் என்பதற்காக. இந்த வருடம் நானே அந்த தேதியை அறிவிப்பதன் மூலம் கனவு நனவாகியுள்ளது. வரும் 19ம் தேதி பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா", என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்ப்பு
பிகில் பட இசை வெளியீட்டு விழாவை விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். தற்போது அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதால், அவர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். இதனால் #BigilAudioFromSept19, #Thalapathy ஆகிய ஹேக்டேகுகள் டிவிட்டரில் டிரெண்டிங்காகியுள்ளன.

வைரலான வசனம்
சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு மிகவும் பிரபலமானது. "உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துவறவன்கிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்", என விஜய் அப்போது கூறி டயலாக், பட்டிதொட்டி எங்கும் பாப்புலர் ஆனது. எனவே பிகில் இசை வெளியீட்டு விழாவில் அவர் என்ன பேசப் போகிறார் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

சிங்கப்பெண்ணே பாடல்
பிகில் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து சிங்கப் பெண்ணே பாடல் முதலில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து விஜய் பாடிய வெறித்தனம் பாடல் சமீபத்தில் வெளியானது. இரண்டுமே ஹிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











