பார்டர் படத்தோட நெஞ்சே நெஞ்சே பாடல்... 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை
சென்னை : நடிகர் அருண் விஜய், ஸ்டெபி படேல் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பார்டர்.
குற்றம் 23 படத்தில் இணைந்த அருண் விஜய் -அறிவழகன் கூட்டணியில் மீண்டும் உருவாகியுள்ளது இந்தப் படம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்தப் பாடல் தற்போது ஒரு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறித்து படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நடிகர் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் அறிவழகன் குற்றம் 23 படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் பார்டர். இந்தப் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. மேலும் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.

குற்றம் 23 படம்
முன்னதாக கடந்த 2017ல் வெளியான குற்றம் 23 படம் அருண் விஜய் மற்றும் அறிவழகன் இருவருக்கும் சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது. த்ரில்லர் படமாக வெளியான இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகியிருந்தார் மஹிமா நம்பியார். படத்தில் தம்பி ராமையா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர்.

ரசிகர்களை கவர்ந்த குற்றம் 23
மருத்துவத் துறையில் நடைபெறும் குற்றங்களை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. ரசிகர்களை இந்தப் படம் வெகுவாக கவர்ந்தது. வெற்றிப்படமாகவும் அமைந்தது. இந்நிலையில் தற்போது இந்த டீம் மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

நவம்பர் 19ல் ரிலீஸ்
பார்டர் படத்தின் சூட்டிங் நிறைவுபெற்று படம் அடுத்த மாதம் 19ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலர் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்களை காத்திருக்க செய்துள்ளது. ட்ரெயிலரில் மிரட்டியிருந்தார் அருண் விஜய்.

பாடல் வெளியீடு
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ரொமாண்டிக் பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். பாடலில் அருண் விஜய் மற்றும் ஸ்டெபி படேலின் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்தது. பாடல் மிகவும் கலர்புல்லாக ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

1 மில்லியன் பார்வைகள்
இந்நிலையில் இந்தப் பாடல் தற்போது ஒரு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறித்து படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. படத்தின் நாயகன் அருண் விஜய்யும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











