செக்க சிவந்த வானத்தில் நான் இலங்கைப் பெண்…! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ் இலங்கைப் பெண்ணாக நடித்துள்ளார்

சென்னை: செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் அர்விந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அதித்தி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் செக்க சிவந்த வானம்.

Chekka Chivantha Vaanam audio launch!

ரோஜா திரைப்படத்தில் ஏஆர்.ரஹ்மானை மணிரத்னம் அறிமுகப்படுத்தியப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள பதினாறாவது படம் இதுவாகும்.

இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சற்றுமுன் தொடங்கியது. முதல் பாடலாக மழைக்குருவி என்ற பாடல் வெளியிடப்பட்டது.

ஏஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியைப் பார்க்க ஏங்கிக்கொண்டிருந்த இசை ரசிகர்களுக்கு விருந்துபடைக்கும் விதமாக இப்பாடலை பாடி ஏஆர்.ரஹ்மான் நிகழ்வைத் துவங்கி வைத்தார். ஹைவேசில் மிதந்து செல்வதுபோன்ற உணர்வைத் தரக்கூடியதாக அப்பாடல் இருந்தது.

இரண்டாவதாக செவந்துபோச்சு நெஞ்சே என்ற பாடலை சுனிதா சாரதி பாடி அசத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இலங்கைப் பெண்ணாக நடித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், கவிஞர் வைரமுத்து, அரவிந்த் சாமி, பாடகர் கார்த்திக், சுகாசினி மணிரத்னம், அருண் விஜய், ட்ரம்ஸ் சிவமணி, நடிகர் தியாகராஜன், மன்சூர் அலிகான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X