அரவிந்த்சாமிக்கு ஜோடி ஜோதிகா இல்லையா? செக்க சிவந்த வானம் புதிய ட்விஸ்ட்!
செக்க சிவந்த வானம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது
சென்னை: செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.
லைகா புரடொக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் செக்க சிவந்த வானம்.

மணிரத்னம் இயக்கியிருக்கும் இப்படத்தில், அர்விந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, பிரகாஷ் ராஜ், அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா, அதித்தி ராவ் ஹையதரி, மன்சூர் அலிகான், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம்.
ஏஅர்.ரஹ்மான் இசையில் படத்திலுள்ள அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. அப்போது இரண்டு பாடல்களை வெளியிட்டனர்.
இன்று மூன்றாவதாக "செவந்து போச்சு நெஞ்சு" என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இப்பாடலை அர்ஜுன் சாண்டி, சத்யபிரகாஷ், ஏஆர்.ரஹ்மான் மற்றும் சுனிதா சாரதி பாடியுள்ளனர்.
மழைக்குருவி பாடல், எப்படி மழைச்சாரல் வீசுவதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறதோ அதேபோல் இந்த பாடல், மழையில் ஆனந்த வெறியாட்டம் ஆடுவதுபோல உள்ளது. ஆனால் பாடலின் ஆரம்பத்தில் மேகங்கள் உரசிக்கொள்வதுபோல் வரும் இசை, டூயட் திரைப்படத்தில் வரும் குளிச்சா குத்தாலம் பாடலின் ட்யூனை டச் செய்வதுபோல் உள்ளது.
இந்த பாடலின் லிரிக் வீடியோவில் படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் எனத் தெரிகிறது. மேலும் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார் என சொல்லப்பட்ட நிலையில், அதித்தி ராவ் ஹைதரி ஜோடியாக இருக்கலாம் என லிரிக் வீடியோ மூலம் தெரிகிறது. இருவரும் ஜோடியா கட்டிப்பிடித்துகொண்டிருக்கும்காட்சி வருகிறது.


Click it and Unblock the Notifications











