செல்லம்மா...செல்லம்மா...டாக்டர் வீடியோ சாங் ப்ரோமோ வெளியீடு

சென்னை : டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த படம் அக்டோபர் 9 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாதமே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டிய இந்த படம், கோடை விடுமுறையில் மே மாதம் ரிலீஸ் செய்யலாம் என தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் படக்குழு திணறி வந்தது. இதனால் இந்த படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூட தகவல் வெளியானது.

செல்லம்மா பாடல் வெளியீடு

செல்லம்மா பாடல் வெளியீடு

சமீபத்தில் டாக்டர் படத்தின் டிரைலரை வெளியிட்ட படக்குழு, ரிலீஸ் தேதியையும் உறுதி செய்தது. இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க இன்று இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான செல்லம்மா...செல்லம்மா பாடலின் வீடியோ சாங் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ரொம்ப கலர்ஃபுல்லாக அமைக்கப்பட்டுள்ள இந்த ப்ரோமோ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

செம ஹிட்

செம ஹிட்

இந்த ஆண்டு துவக்கத்திலேயே செல்லம்மா செல்லம்மா பாடல் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டது. அப்போதே இந்த பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்று செம ஹிட் ஆனது. அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடல் இளைஞர்களை கவர்ந்து லட்சக்கணக்கில் பார்வைகளை அள்ளியது. இந்த பாடலில் பிரியங்கா மோகன் அழகான பொம்மையை போல் ஆடி இருப்பது, அனைவரையும் வாய் பிளந்து பார்க்க வைத்துள்ளது.

சாதனை கன்ஃபார்ம்

சாதனை கன்ஃபார்ம்

சூப்பர் ஹிட் சாதனை படைத்த பாடல்களான புட்ட பொம்மா, ரெளடி பேபி போன்ற பாடல்களுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் தான் இந்த பாடலுக்கும் நடனம் அமைத்துள்ளார். ஜாலியான சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் திலீப்குமார் காம்போவில் உருவாகி இருக்கும் டாக்டர் படமும், அதன் பாடல்களும் மற்றொரு சாதனையை படைக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

யு/ஏ சான்று

யு/ஏ சான்று

சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்ட டாக்டர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குடும்ப என்டர்டைன்மென்ட் படமாக டாக்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகனுடன் வினய், தீபா உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

2019 ம் ஆண்டு நடித்த ஹீரோ படத்திற்கு பிறகு, தற்போது தான் சிவகார்த்திகேயன் படம் ரிலீசாக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் சிவகார்த்திகேயனின் படம் என்பதால் ரசிகர்கள் மட்டுமல்ல தியேட்டர் உரிமையாளர்களிடமும் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த படம் நிச்சயம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தியேட்டரை நோக்கி வரவழைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X