டாக்டர் படத்தின் செல்லம்மா வீடியோ பாடல் வெளியீடு

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்டுவரும் படம் டாக்டர்.

திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ள இந்தப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வசூல்மழையும் பொழிந்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் சிறப்பான வரவேற்பை பெற்ற செல்லம்மா பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

 டாக்டர் படம்

டாக்டர் படம்

நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகிபாபு, தீபா, இளவரசு ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளிவந்து கடந்த இரண்டு வாரங்களாக சக்கைப் போடு போட்டுவரும் படம் டாக்டர். நெல்சன் இயக்கத்தில் இந்தப்படம் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக அமைந்துள்ளது.

அதிக வசூல்

அதிக வசூல்

படத்தில் காமெடி தூக்கலாக இருந்தாலும் படத்திற்கான மெசேஜை சொல்லவும் நெல்சன் தவறவில்லை, இந்தப் படத்திற்கான விமர்சனங்கள் சிறப்பாக இருந்த நிலையில், ரசிகர்கள் அதிகளவில் தியேட்டர்களில் சென்று படத்தை பார்த்து ரசித்தனர். இதுவரை இந்தப் படம் 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பலத்தை தந்த காமெடி

பலத்தை தந்த காமெடி

இந்த ஆண்டில் இந்தியாவில் தியேட்டர்களில் வெளியான படங்களில் அதிக வசூலை குவித்த முதல் 5 படங்களில் டாக்டர் படமும் ஒன்று என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் மிகவும் சாதுவான கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். காமெடியில் மற்றவர்களை ஸ்கோர் செய்ய விட்டிருப்பதும் படத்திற்கான பலம்.

அனிருத் இசை

அனிருத் இசை

அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பை படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே பெற்றிருந்தது. குறிப்பாக செல்லம்மா பாடல், அனிருத் இசை மற்றும் குரலில் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் படம் வெளிவந்து இரு வாரங்கள் கழித்து தற்போது பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மெழுகு சிலை

மெழுகு சிலை

இதன்மூலம் படத்திற்கான எதிர்பார்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. பாடலில் குறிப்பிட்டுள்ளபடி நாயகி பிரியங்கா, மெழுகு சிலையாகவே காட்சியளிக்கிறார். சிவா மற்றும் பிரியங்கா இருவருக்கிடையிலான கெமிஸ்ட்ரி பாடலில் சிறப்பாக அமைந்துள்ளது.

தெலுங்கிலும் பாடல் வெளியீடு

தெலுங்கிலும் பாடல் வெளியீடு

இதனிடையே தெலுங்கிலும் படம் வெளியாகி நல்ல வசூலை வாரிக்குவித்து வரும் நிலையில், தெலுங்கிலும் இந்தப் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கில் வருண் டாக்டர் என்ற பெயரில் படம் ரிலீசாகியுள்ள நிலையில் சிட்டம்மா என்ற அந்தப் பாடலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X