மெளனங்களைக் கூட இசையால் பேசிவிடும் அன்புயிர்.. அன்னையின் ஆண்குரல்.. யுவனை வாழ்த்தும் பிரபலங்கள்!
சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1997ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கவிஞர் நா முத்துக்குமார் யுவன் சங்கர் ராஜா காம்பினேஷனில் வெளியான பாடல்கள் பெரும் ஹிட்டாயின. நா முத்துக்குமார் மறைவுக்கு பிறகு யுவன் கேரியரிலும் பெரிய ஹிட் என்று சொல்லும் அளவுக்கு எந்த படமும் அமையவில்லை.

10க்கும் மேற்பட்ட படங்கள்
கவிஞர் நா முத்துக்குமாரின் மறைவு தனது கேரியரை காலி செய்துவிட்டதாக பல முறை பேட்டிகளில் கூறியுள்ளார் யுவன் சங்கர் ராஜா. தற்போது 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. அஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, சந்தானத்தின் டிக்கிலோனா, விஷாலின் 31வது படம் என வரிசையாக பல படங்களில் பிஸியாக உள்ளார் யுவன்சங்கர் ராஜா.

அன்னையின் ஆண் குரல் நீ
இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் என்ஜாய் எஞ்சாமி புகழ், தெருக்குரல் அறிவு பதிவிட்டுள்ள ட்வீட்டில், அன்னையின் ஆண்குரல் நீ..! யுவன்.. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா என பதிவிட்டுள்ளார்.

மங்காத்தா டே
இதேபோல் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ள ட்வீட்டில், பிறந்த நாள் வாழ்த்துகள் யுவன் சங்கர் ராஜா.. கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்... லவ் யூ.. கீப் ராக்கிங்.. அண்ட் ஹேப்பி மங்காத்தா டே டூ ஆல் தல ஃபேன்ஸ் என பதிவிட்டுள்ளார்.

யுவனிஸம் ஃபார் லைஃப்
இதேபோல் நடிகர் அசோக் செல்வன் பதிவிட்டுள்ள ட்வீட்டில் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. யுவனிஸம் ஃபார் லைஃப்.. என பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கையும் அழகானதாய் இருக்கட்டும்
இதேபோல் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள ட்வீட்டில் பிறந்தநாள் வாழ்த்துகள் ஞானி யுவன் சங்கர் ராஜா. உங்கள் இசையை போன்றே உங்களின் வாழ்க்கையும் அழகானதாய் இருக்க வேண்டும்.. ஆசீர்வாதங்களுடன் இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

மெளனங்களைக் கூட இசையால் பேசிவிடும்
இதேபோல் பாடலாசிரியர் அருண்பாரதி பதிவிட்டுள்ள ட்வீட்டில், மெளனங்களைக் கூட இசையால் பேசிவிடும் அன்புயிர் இசை இளவல் யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு இதயம் நிறைந்த இனிய தாலாட்டு நாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

ட்ரென்ட்டிங்கில் தலைவா
இதேபோல் ரசிகர்கள் பலரும் யுவன் சங்கர் ராஜாவுக்கு சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் Thalaiva என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்ட்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications











