“தும்பி துள்ளல்” பாடலை இசைத்த பார்வையற்ற சிறுமி.. ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டு.. லலித் குமார் ‘கிப்ட்’!

சென்னை: ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஸ்ரேயா கோஷல் குரலில் லூப் மோடில் இளைஞர்கள் தற்போது கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் என்றால் அது சியான் விக்ரமின் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'தும்பி துள்ளல்' தான்.

துள்ளாத மனங்களையும் துள்ள வைத்து வரும் இந்த பாடலை, பார்வையற்ற சிறுமி சஹானா தனது கீபோர்டில் இசைத்து அசத்தி உள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானிடம் பாராட்டுக்களை பெற்றதை தொடர்ந்து, கோப்ரா பட தயாரிப்பாளர் லலித் குமார், சிறுமி சஹானாவை நேரில் சந்தித்து விலை உயர்ந்த இசைக் கருவிகளை கிப்டாகவும் வழங்கி உள்ளார்.

கோப்ரா

கோப்ரா

செவன் ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீனிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படம் இறுதி கட்ட படபிடிப்பு முடியாமல் கொரோனா பரவல் காரணமாக காத்திருக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் விக்ரமை 7 விதமான கெட்டப்பில் காட்டி இருந்தனர்.

தும்பி துள்ளல்

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விவேக்கின் வரிகளில் உருவாகி உள்ள கோப்ரா படத்தின் "தும்பி துள்ளல்" பாடலை ஸ்ரேயா கோஷலும் நகுல் அபயங்காரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த லிரிக் வீடியோவில் அனிமேஷன் வொர்க்கெல்லாம் செய்து, படத்தின் பிரம்மாண்டத்தை காட்டி உள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

லூப் மோடில்

லூப் மோடில்

இசைப்புயல் இசையில், ஸ்ரேயா கோஷலின் மாயக் குரலில் மனதை மயக்கும் காதல் பாடலாக உருவாகி உள்ள இந்த "தும்பி துள்ளல்" பாடல் கடந்த 3 நாட்களாக லூப் மோடில், இளைஞர்கள் திரும்ப திரும்ப கேட்டு இன்புறும் பாடலாக அமைந்துள்ளது. சோனி மியூசிக் வெளியிட்டுள்ள இந்த பாடல், 3.5 மில்லியன் வியூஸை கடந்துள்ளது.

பார்வையற்ற சிறுமி செய்த சாதனை

தும்பி துள்ளல் பாடல் வெளியான உடனேயே, பார்வையற்ற சிறுமி சஹானா, இந்த பாடலை தனது கீபோர்டில் வாசித்து, அந்த வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டு இருந்தார். ஏ.ஆர். ரஹ்மானின் மேஜிக் இசையில் உருவான இந்த பாட்டை, சிறுமி ஒருவர் இப்படி வாசிக்கிறாரே என பொதுமக்கள் பாராட்ட, ரஹ்மானும், அந்த இசையை கேட்டு மகிழ்ந்து பாராட்டி உள்ளார்.

பரிசு வழங்கிய தயாரிப்பாளர்

ரஹ்மானின் பாராட்டை தொடர்ந்து, அந்த சிறுமியின் வீடியோ 4 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. இந்நிலையில், கோப்ரா படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார், அந்த சிறுமியின் வீட்டிற்கே நேரடியாக சென்று, அவரை பாராட்டியது மட்டுமல்லாமல், ஸ்கார்லெட் சோலோ ஸ்டூடியோ என்ற இசைக் கருவி செட்டப்பையும் பரிசாக வழங்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X