பாகுபலி நடிகர் படத்தில் பாட்டுப் பாடிய யுவன் ஷங்கர் ராஜா... அதுவும் 2 மொழிகளில்... குவியும் வாழ்த்து!
சென்னை: பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா பாகுபலி நடிகரின் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. 1997ஆம் ஆண்டு அரவிந்தன் படத்தின் மூலம் தனது கேரியரை தொடங்கினார்.
பூவெல்லாம் கேட்டுப்பார், துள்ளுவதோ இளமை, மனதை திருடி விட்டாய், நந்தா, மவுனம் பேசியதே, காதல் கொண்டேன், புதிய கீதை, 7ஜி ரெய்ன்போ காலனி, மன்மதன், ராம், வல்லவன், பருத்தி வீரன், தீபாவளி, தாமிரபரணி, பில்லா, யாரடி நீ மோகினி என ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மீண்டும் பிஸியான யுவன்
பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் திடீர் மறைவுக்கு பிறகு சற்று தொய்வடைந்திருந்தார் யுவன் ஷங்கர்ராஜா. அவரது மறைவால் தனது கேரியரை காலியாகிவிட்டதாக கூறி வந்தார். தற்போது மீண்டும் படங்களில் பிஸியாகிவிட்டார் யுவன் ஷங்கர் ராஜா. தற்போது 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா.

பாகுபலி நடிகர் படத்தில் பாடல்
இசையமைப்பாளராக மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகராகவும் வலம் வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா, பாகுபலி நடிகரான பிரபாஸின் அப்கம்மிங் படத்தில் அசத்தல் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

யுவன் குரலில் பாடல்
யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.

தமிழ் தெலுங்கு வெர்ஷன்
இதில் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷனை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். அதே பொருள் தரும் வரிகள், ஆனால் முற்றிலும் மாறுபட்ட இசையில் உருவாகியுள்ள இந்த பாடலின் இந்தி வெர்ஷன் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் நடிகர் பிரபாஸின் பிறந்த நாளில் ராதே ஷ்யாம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
Recommended Video

பொங்கலுக்கு ரிலீஸ்
ராதே ஷ்யாம் திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரமாண்டமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. பன்மொழிப் படமான ராதே ஷ்யாம் படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











