»   »  'தோட்டா தெறிக்க தெறிக்க' சத்யம் திரையரங்கில் வெளியாகும் தெறி பாடல்கள்

'தோட்டா தெறிக்க தெறிக்க' சத்யம் திரையரங்கில் வெளியாகும் தெறி பாடல்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி படத்தின் பாடல்களை, சத்யம் திரையரங்கில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்திருக்கிறார்.


ஜி.வி.பிரகாஷின் 50 வது படமாக விஜய்யின் தெறி உருவாகியிருக்கிறது.


சத்யம் திரையரங்கில்

தெறி படத்தின் பாடல் வெளியீட்டு விழா கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தாணு தெறி படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.


அழைப்பிதழ்

தெறி படத்தின் அழைப்பிதழ்கள் தற்போது விஜய் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.


பேனர்கள்

தெறி இசை வெளியீட்டையொட்டி சத்யம் திரையரங்கில் பெரிய சைஸ் பேனர் மற்றும் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.


விஜய்

இப்படத்தின் போஸ்டர்களை நடிகர் விஜய் ஒவ்வொன்றாக வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சற்றுமுன் ஈனா மீனா டீகா பாடலின் போஸ்டரை விஜய் வெளியிட்டுள்ளார்.


ரஜினி

ரஜினி

இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்ள மாட்டார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 2.0 படப்பிடிப்புகளில் ரஜினி பிஸியாக இருப்பதுதான் இதற்குக் காரணமாம். ரஜினி கலந்து கொள்ளவில்லை என்றாலும் வேறு சில முக்கிய பிரபலங்கள் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.


English summary
Vijay's Theri Audio Launch Date & Place now Revealed. Producer Thanu Tweeted "#Theri Audio Launch will happen Sathyam Theatre, Chennai on 20th March actorvijay Atlee_dir gvprakash''.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil