Don't Miss!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குக் வித் கோமாளி அஸ்வினின் அட்டகாசமான ‘உருட்டு’ பாட்டு ரிலீஸ்.. சிவாங்கியும் புகழும் கலக்குறாங்க!
சென்னை: குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் ஹீரோவாக நடித்து வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் 'உருட்டு' லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி புகழ் மைக்கை பிடித்து பாட ஆரம்பிக்க ரசிகர்கள் இன்பதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டனர்.
சிவாங்கியின் க்யூட் வாய்ஸால் பாடல் வேற லெவல் கல்யாண செலிபிரேஷனாகவே மாறி விட்டது.
வீரப்பெண்மணியாய் கையில் வாளுடன் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சாவாக உருமாறிய புகைப்படங்கள்!
ஆல்பம் ஹீரோ
குக் வித் கோமாளி அஸ்வின் ஆல்பம் ஹீரோவாக மாறி உள்ளார். அஸ்வினின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வைரலாகி வருகின்றன. குட்டி பட்டாஸ், அடிபொலி பாடல்கள் தனியாக வெளியாகி ஹிட்டடித்த நிலையில், என்ன சொல்ல போகிறாய் படத்தில் இடம்பிடித்துள்ள உருட்டு பாடலும் தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
புகழ் செம குத்து
சிங்கிளா சுத்திக் கொண்டிருக்கும் ஆண்களே.. நான் சிங்கிள் தான்னு சுத்திக் கொண்டிருக்கும் பெண்களே எப்படா எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்கனு வெயிட் பண்ணிட்டு இருக்கும் அங்கிள்களே என ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் மைக் முன்னாள் ரொம்ப சீரியஸாக பாடலுக்கு முன்பாக வரும் வசனங்களை குக் வித் கோமாளி புகழ் படிப்பதும், அந்த பாடலுக்கு களத்தில் இறங்கி சும்மா செம குத்து குத்துவதும் வேற லெவல். என் மச்சானுக்கு நான் தான் செய்வேன் என கெத்து காட்டி உள்ளார்.
சிவாங்கி வாய்ஸ்
அஸ்வினுக்காக அடிபொலி ஆல்பம் குரலில் முதல் முதலாக குரல் கொடுத்த குக் வித் கோமாளி பார்ட்னர் சிவாங்கி அஸ்வின் ஹீரோவாக அறிமுகம் ஆக உள்ள படத்திற்கும் தனது தேன் குரலால் பாடியிருப்பது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
அஸ்வினின் உருட்டு
டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ஹரிஹரன் இயக்கத்தில் அஸ்வின், தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா நடிப்பில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் கல்யாண பாடலான உருட்டு பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. விவேக் மெர்வின் இசையில் உருவாகி உள்ள இந்த பாடலை மாதேவன் எழுதி உள்ளார்.
கன்ஃபார்ம் ஹிட்
டிக்கிலோனா படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் வைக்காம போனாலும் பாடல் போல இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டாகும் என்பது முதல் முறை பாடலை கேட்கும் போதே தெரிவதாக அஸ்வின் மற்றும் சிவாங்கி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகளை போட்டு பாடலை வைரலாக்கி வருகின்றனர்.