Vijay Income Tax: விஜய் மாதிரி வரி கட்டாமல் இருக்க மாட்டேன்.. விஜய்யை கலாய்த்து விட்ட கூல் சுரேஷ்

சென்னை: நடிகர் விஜய்யின் 'புலி' பட வருமான வரி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இது குறித்து நடிகர் கூல் சுரேஷ் பேசியுள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக விஜய்யை கலாய்க்கும் விதமாக இருந்த அவரது கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் புலி. இந்தப் படத்திற்காக விஜய் பெற்ற ரூ. 15 கோடி சம்பளத்தை, அவர் தனது வருமான வரி கணக்கில் முறையாகக் காட்டவில்லை என்று வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. இதற்காக அந்தத் தொகையில் 10 சதவீதமான ரூ. 1.5 கோடியை அபராதமாக செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இந்த அபராதத்தை ரத்து செய்யக் கோரி விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019-ல் நடந்த சோதனையை அடிப்படையாகக் கொண்டு, மூன்று ஆண்டுகள் கழித்து 2022-ல் அபராதம் விதித்தது சட்டப்படி செல்லாது என்று விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.

Cool Suresh Trolls Vijay For Rs 1 5 Crore Penalty To Income Tax Department Puli Movie Case
Photo Credit:

அபராதம்: இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஜய் தரப்பு வாதத்தை நிராகரித்தனர். மேலும், வருமானத்தை மறைத்தது உறுதியாகியுள்ளது. காலதாமதமாக அபராதம் விதிக்கப்பட்டாலும், விதிமீறல் அடிப்படையில் அந்த அபராதம் சரியானதுதான். எனவே, விஜய் ரூ. 1.5 கோடி அபராதத்தை கட்டாயம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறித்த தகவல் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் தகவல்களில் ஒன்றாக உள்ளது. இது திரைத்துறையிலும் அரசியல் தளத்திலும் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கலாய்த்த கூல் சுரேஷ்: இப்படி இருக்கையில் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் இது தொடர்பாக பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பேசுகையில், " எனக்கும் வரி ஏய்ப்பு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார். தொடர்ந்து, நான் விஜய் போல 200, 300 கோடிகள் சம்பளம் வாங்கினால், முறையாக வரி செலுத்துவேன். நாடு நமக்கு என்ன செய்தது என்று யோசிக்க கூடாது. நாம் நாட்டிற்கு என்ன செய்தோம் என்று தான் பார்க்க வேண்டும் " என்று பேசினார். அவரது இந்த பேச்சு விஜய்யை அட்டாக் செய்வது போல இருப்பதால் இணையவாசிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Cool Suresh Trolls Vijay For Rs 1 5 Crore Penalty To Income Tax Department Puli Movie Case
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X