Csk சிங்கங்களா…செல்லங்களா… பட்டையை கிளப்பும் கொரோனா குமார் டைட்டில் ப்ரோமோ சாங் !
சென்னை : சிம்பு ஹீரோவாக நடிக்கும் கொரோனா குமார் படத்தின் டைட்டில் ப்ரோமோ பாடல் வெளியானது.
Recommended Video
ஐபிஎல் போட்டி தொடங்கியதை முன்னிட்டு ஐபிஎல் வீரர்களை வரவேற்கும் விதமாக இந்த பாடல் உருவாகி உள்ளது.
CSK சிங்கங்களா என்று தொடங்கும் இந்த பாடலை சிம்பு, பூவையார் இணைந்து பாடி உள்ளனர்.

கோகுல் இயக்கத்தில்
கோகுல் இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. அதில், விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி, சூரி, நான் கடவுள்' ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்கள், காட்சிகள் அனைத்தும் இப்போதும் மீம்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா குமார்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திலிருந்த கதாபாத்திரங்களுள் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாக படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க உள்ளார். இது சிம்புவின் 48வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு பூவையாரின் குரலில்
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டைட்டில் ப்ரோமோ பாடல் வெளியாகி உள்ளது. எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதை அடுத்து ஐபிஎல் வீரர்களை கௌரவிக்கும் விதமாக இந்த பாடல் Think Music தளத்தில் வெளியானது. இந்த பாடலை சிம்பு, பூவையார் இணைந்து பாடி உள்ளனர்.

Csk சிங்கங்களா
Csk சிங்கங்களா... Csk செல்லங்களா... என்று சிம்பு தனது கம்பீரமான குரலில் பாடி உள்ளார். மேலும், அந்த பாடலில் அனைவரும Csk ஜெர்சியுடன் சிங்க முகமூடியை அணிந்து கொண்டு ஆடுகின்றனர்.. அதில்... நம்ம தல... நம்ம தல தோனி... கொரோனா குமாரு நார்த் மெட்ராஸ் ஞானி, சின்னத் தல.. சின்னத்தல ரெய்னா...கொரோனா வைரஸ் பொறந்தநாடு சைனா என்றும், மஞ்ச சட்ட கருப்பழகன் ப்ராவோ கொரோனா குமார் ஆம்னி பஸ்ஸு வால்வோ! என்று ஒவ்வொரு வீரரின் பெயரை கூறி அவர்களை கௌரவிக்கும் விதத்தில் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலை அனைவரும் ரசித்து ரசித்து கேட்டு வருகின்றனர்.

மாநாடு
சிம்பு மாநாடு திரைப்படத்திற்கு பிறகு படு பிஸியாக நடித்து வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அரசியல் த்ரில்லர் படமான மாநாடு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் இஸ்லாமிய இளைஞராக சிம்பு நடித்துள்ளார்.
பல படங்களில் கமிட்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்திற்காக உடல் எடையை பாதியாக குறைத்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்தையும் கைவசம் வைத்துள்ளார். சிம்பு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருவதை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கவனித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











