Bravo: ஐபிஎல் ஒருபக்கம் இருக்கட்டும்.. டபுள் டக்கர் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட பிராவோ!
சென்னை: தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டபுள் டக்கர் படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்கள் மிகச்சிறப்பான வகையில் நடந்து வருகிறது. படத்தில் அனிமேஷன் கேரக்டர்கள் முக்கியமான ரோலில் இடம்பெற்றுள்ள நிலையில், படத்தின் அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. கடந்த மாதத்தில் இந்தப் படத்தின் கினி கினி பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. ரசிகர்களை ஆட்டம் போட செய்துள்ளது.
படத்தின் நாயகனாக தீரஜ் நடித்து வருகிறார். இவர் முன்னதாக போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் அனிமேஷன் கேரக்டர்களுடன் இவர் மாஸ் காட்டியுள்ள டிரெய்லர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக இந்தப் படத்தின் கினி கினி பாடல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. நாளை வெளியாகவுள்ள இந்தப் படத்தை மீரா மஹதி இயக்கியுள்ளார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

டபுள் டக்கர் படம்: நடிகர் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டபுள் டக்கள் படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. அனிமேஷன் கேரக்டர்களை வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை மீரா மஹதி இயக்கியுள்ளார். இந்த அனிமேஷன் கேரக்டர்களை மையமாக கொண்டு, இந்தப் படத்தின் அடுத்தடுத்த ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. ரைட், லெஃப்ட் என இருவேறு அனிமேஷன் கேரக்டர்கள் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கினி கினி பாடல்: படத்தின் நாயகனாக தீரஜ் நடித்துள்ள நிலையில், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர் முன்னதாக போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். படத்தின் வரிகளையும் அவரே எழுதியுள்ளார். ஏர் ஃபிளிக் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களை வெகுவாக என்டர்டெயின் செய்யும் என்று இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் கினி கினி பாடல் கடந்த மாதத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களை ஆட்டம் போட செய்துள்ளது.
கினி கினி பாடலுக்கு ஆட்டம் போட்ட பிராவோ: இந்தப் பாடல் சென்னையில் நடந்த சிஎஸ்கே போட்டியின்போது ஒலிபரப்பப்பட்டது. இந்தப் பாடலை கேட்டு இம்ப்ரஸ் ஆன பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோ, அந்தப் பாடல் குறித்து விசாரித்துள்ளார். தொடர்ந்து தான் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு படக்குழுவினரை வரவழைத்த பிராவோ, படத்தின் ஹீரோ தீரஜ்ஜுடன் இணைந்து கினிகினி பாட்டுக்கு சிறப்பான வகையில் ஆட்டம் போட்டுள்ளார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஏராளமானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில அவரது ஆட்டம் மிகச்சிறப்பாக அமைந்தது.
பேன்டசி காமெடி படம்: பேன்டசி காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின்மூலம் கோலிவுட்டில் மீரா மஹதி, இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்தப் படத்தின் டீசர், ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 5 மில்லியனுக்கும் மேற்பட்ட வியூஸ்களை பெற்றிருந்தது. அடுத்தடுத்து சீரியஸ் கதைக்கங்களில் படங்கள் வெளியாகிவரும் சூழலில், இந்தப் படம் காமெடியை மையமாக வைத்து வெளியாகவுள்ளது. படம் மிகப்பெரிய என்டர்டெயின்மெண்ட்டாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











