»   »  ஈழத்தமிழருக்கு வாய்ப்பு கொடுத்த டி.இமான்!

ஈழத்தமிழருக்கு வாய்ப்பு கொடுத்த டி.இமான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : இசையமைப்பாளர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த நல்ல பாடகர்களுக்குத் தங்களது படங்களில் பாட வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை பலரை தான் இசையமைக்கும் படத்தில் பாடகராக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

அந்தவகையில் தற்போது இளம் பாடகர்கள் நிறைய பேரை தன்னுடைய படங்களில் பாட வைத்து வருபவர் இசையமைப்பாளர் டி.இமான். 'சரவணன் இருக்க பயமேன்' உள்பட தனது படங்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

D.Imman gives chance to srilankan tamilian

இவர் 'வணங்காமுடி' என்ற படத்திற்கு தற்போது இசையமைக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை ஈழத் தமிழர் விதுஷன் என்பவர் பாடியுள்ளாராம். இந்தத் தகவலை டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

செல்வா இயக்கும் 'வணங்காமுடி' படத்தில் அரவிந்த்சாமி, ரித்திகா சிங், சிம்ரன், நந்திதா ஆகியோர் நடிக்கிறார்கள். மேஜிக் பாக்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

English summary
D.Imman is currently composing music for 'Vanangamudi', which is lead by Arvindswamy. D.Imman give a chance to srilankan tamilian Vidushan on this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil