twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டொராண்டோ தமிழ் இருக்கை தூதரானார் டி.இமான்.. தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்!

    |

    டொராண்டோ : செம்மொழி அந்தஸ்து பெற்ற பெருமை மிகு தமிழ் மொழியின் டொராண்டோ தமிழ் இருக்கை தூதராக, இசையமைப்பாளர் டி.இமானுக்கு விசேஷ கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது.

    "உலகின் தொன்மையான மொழி எனப் போற்றப்படும் தமிழ், வாய் வழித் தொடர்பு மொழி என்பதைத் தாண்டி மனித குலத்தின் வாழ்வியல், நாகரீகம் மற்றும் கலாச்சாரங்களை தன் இலக்கியங்களில் உள்ளடக்கியதாகும்.

    சுஷாந்துடன் சண்டை போட்டது நிஜம்தான்.. 9 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை கக்கிய ரியா!சுஷாந்துடன் சண்டை போட்டது நிஜம்தான்.. 9 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை கக்கிய ரியா!

    நாகரீகம்

    நாகரீகம்

    மொழிகளின் தாய் என தமிழ் புகழப்படுவது குறித்து தமிழன் என்ற முறையில் தான் பெருமையும் பேருவகையும் கொள்கிறேன் என்று இம்மான் கூறி உள்ளார்

    செழுமை

    செழுமை

    பல்வேறு கலை வடிவங்கள் மூலம் மொழிக்கு செழுமை ஏற்றிய மிகச் சிறந்த மனிதர்களால் ஆசிர்வதிக்கப்பட்டது தமிழ் நிலம். டொராண்டோ தமிழ் இருக்கையின் தூதராக தான் நியமிக்கப்பட்டபோது, இவற்றையெல்லாம் அறிந்து மிகவும் ஆச்சரியமடைந்தேன்.

    அனைவருக்கும் நன்றி

    அனைவருக்கும் நன்றி

    கனடாவின் முதல் தர பல்கலைக் கழகமான டொராண்டாவில் நமது தாய்மொழிக்கு இருக்கை அமைத்து அங்கீகரித்தது, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கெல்லாம் உவகை தரும் பெருமைமிகு தருணம். டொராண்டோ பல்கலைக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்தும் இந்த நேரத்தில், எனக்கு அளிக்கப்பட்ட இந்த கெளரவம், தாய் மொழி மீது நான் கொண்ட ஈடுபாட்டை இன்னும் மேம்படுத்தும் என்று தெரிவித்துக் கொண்டார்

    ட்ரெண்டிங்

    ட்ரெண்டிங்

    பல இசை மேதைகள் பல விதமான சாதனைகள் படைத்து தமிழுக்கு பெயர் சேர்த்து உள்ளனர். அந்த வகையில் இசையமைப்பாளர் டி இமான் தமிழ் இசைக்கு பெருமை சேர்த்து உள்ள இந்த தருணம் பலராலும் பாராட்டப் படுகிறது. இமான் இசை அமைத்த பல படைப்புகள் இன்று வரை கூகிள் ட்ரெண்டிங் நிலையில் உள்ளது என்றும் மக்கள் மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கிறார்கள் என்றும் கூறி வருகிறார்கள். எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் மனிதனின் மனதை மாற்ற கூடிய சக்தி நல்ல இசைக்கு மட்டுமே உண்டு . அப்படி பட்ட நல்ல ரசனை உள்ள மனிதர்கள் நல்ல ரசிகர்களாக மாற்றி தொடர்ந்து பல பாடல்களை ஹிட் ஆக்கி வருகிறார்கள். இமான் மேலும் பல சாதனைகள் செய்ய வேண்டும் இசையால் வெல்ல வேண்டும் என்று பல பிரபலங்கள் வாழ்த்தி வருகிறார்கள்.

    English summary
    D.Imman is ambassador at University of Toronto
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X