சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் ஆடியோ லான்ச் எப்போ தெரியுமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களே சும்மா கிழிக்க தயாராகுங்கள் தர்பார் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 7ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
சற்றுமுன், இந்த மாஸ் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

காலை முதலே ட்விட்டரில், விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ள நிலையில், லைகாவின் இந்த அதிரடி அறிவிப்பால், இன்னும் கொஞ்ச நேரத்தில் ரஜினி ரசிகர்கள் கைவசம் ட்விட்டர் டிரெண்டிங் செல்லும் என தெரிகிறது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ள தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சும்மா கிழி பாடல் கடந்த மாதம் வெளியாகி, தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தை பிடித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், அனிருத் இசையில் மொத்த ஆல்பமும் வரும் டிசம்பர் 7ம் தேதி வெளியாகிறது.

ரஜினியின் பிறந்த நாள் டிசம்பர் 12ம் தேதி கொண்டாடவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு தர்பார் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் டிசம்பர் 7ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
தர்பார் படம் குறித்தும் தனது அரசியல் என்ட்ரி கொடுத்தும் ரஜினி இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











