மோகன்ஜி இசையமைப்பாளராக அறிமுகமாகும் முகம் நீ அகம் நான்!

By Shankar

தமிழ் சினிமாவில் நண்பர்களின் ஆழமான நட்பு குறித்து பல படங்கள் வெளிவந்திருக்கின்றன.

அந்த வரிசையில் சென்னை புரொடஷன் சார்பில் எழில்இனியன் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிற 'முகம் நீ அகம் நான்' படம் இரு நண்பர்களின் ஆழமான நட்பை வித்தியாசமான கோணத்தில் சொல்கிறது.

புதுமுக ஹீரோவாக சங்கர் சீனிவாசன் நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் மோகன்ஜி

இசையமைப்பாளர் மோகன்ஜி

இந்த படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் மோகன்ஜி. ஏற்கெனவே இவர் விடியும் வரை பேசு படத்துக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். ஆனால் முழுமையான இசையமைப்பாளராக இந்தப் படத்தில்தான் அறிமுகமாகிறார்.

மழைத் தூறலிலே..

மழைத் தூறலிலே..

ஒவ்வொரு பாடல்களிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் மோகன்ஜி. மழைத் தூறலிலே' என்ற மெலோடி பாடல் இந்தாண்டின் சிறந்த மெலோடி பாடலாக தேர்வு பெரும் என்கிறார்கள் பாடலை கேட்ட அனைவரும்.

கூறுகெட்ட கொசுவே

கூறுகெட்ட கொசுவே

புஷ்பவனம் குப்புசாமி தனது கணீர் குரலில் ‘கூறுகெட்ட கொசுவே' என்ற பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடலில் கொசுவால் ஏற்படுகிற பல பிரச்னைகளை அலசியிருக்கிறார்கள். ஒரு விழிப்புணர்வையும் அதேநேரம் பல உண்மைகளையும் இந்த பாடலில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த பாடலை இசையமைப்பாளர் மோகன்ஜியே எழுதி இசையமைத்திருக்கிறார்.

நாயகி ஹாஸினி

நாயகி ஹாஸினி

ரா.நா.சரவணன் இந்த படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். ஹீரோ சங்கர் சீனிவாசன் ஜோடியாக ஹாசினி(ஷரிகா) நடித்திருக்கிறார். மகேஷ், கஞ்சா கருப்பு, ஆன்ட்ரூஸ், பயில்வான் ரங்கநாதன், அல்வா வாசு, தேனிமுருகன், சுந்தரி, ஒய்விஎஸ், பாய்ஸ் ராஜன், மோகனபிரியா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இசைவெளியீட்டு விழா

இசைவெளியீட்டு விழா

முகம் நீ அகம் நான் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. முதல் சிடியை இயக்குநர் விக்ரமன் வெளியிட, இயக்குநர்கள் சசி, ராம், சீனு ராமசாமி, சுரேஷ், பாடலாசிரியர் சினேகன் மற்றும் ஓவியர் ஏபி ஸ்ரீதர் பெற்றுக் கொண்டனர்.

பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X