தர்பாரில்..தேன் இசை தென்றல் தேவாவின் பின்னணி இசை

சென்னை: தர்பார் படத்திற்காக தேவாவுடன் இணைந்து அனிருத் இசையமைத்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை தற்போது அனிருத் வெளியிட்டு உள்ளார்.

90க‌ளி‌ல் தான் இசையால் ராஜ்ஜியம் செய்தவர் தான் தேன் இசை தென்றல் தேவா. வைகாசி பிற‌ந்தாச்சு படத்தின் மூலம் உச்சம் தொட்ட தேவாவிற்கு அந்த ஆ‌ண்டு சிறந்த இசை அமைப்பாளர் விருது கிடைத்தது.

Devas Background Music in Darbar

தேவா ஒரு இசை மன்னன் என்றே சொல்லலாம் ஏனெனில் அவர் பல்வேறு வகையான இசையை தந்தவர். தேவா பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து இருக்கிறார் .பல சிறந்த இசையை தந்திருக்கிறார் .தமிழ் சினிமாவில் கானா என்ற இசைக்கென தனி இடம் இருக்கிறது என்றால் அது தேவா அமைத்து கொடுத்தது தான் .

தேவா இசையமைத்த சிறந்த படங்களில் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாமலை படம். அந்த படத்தில் தேவா ரஜினிக்கு அமைத்த இசையே பல வருடங்களாக ரஜினி படங்களில் ரஜினி பெயர் படத்தில் வரும்போது வரும் .இந்த இசைக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு .தேவா ரசிகர்களுக்கும் அண்ணாமலை படத்தின் இசை என்றால் மிகவும் பிடிக்கும் .

Devas Background Music in Darbar

அண்ணாமலை படத்தில் பயன்படுத்திய இந்த பின்னணி இசையை அனிருத் தர்பார் படத்தில் ஒரு சண்டை காட்சியின் போது பயன்படுத்தி இருப்பார் . அந்த சண்டை காட்சி தர்பார் படத்தில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சண்டை காட்சிகளில் ஒன்று . தர்பார் படம் வெளியாகி ரஜினி ரசிகர்கள் இடையை நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது .

அனிரூத் அந்த அண்ணாமலை படத்தின் இசையை இதற்கு முன்பே பேட்ட படத்திலும் பயன்படுத்தி இருப்பார் தற்போது தர்பார் படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார் .இந்த பின்னணி இசைக்காக தேவா உதவி இருக்கும் தகவலை அனிருத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார் .

Devas Background Music in Darbar

இந்த தகவலை ஒரு வீடியோ மூலம் வெளியிட்டு கூறியிருக்கிறார் அனிருத் .இந்த வீடியோவில் தேவா அறிவுரையின் கீழ் ரஜினிக்கு இசைத்த அந்த பின்னணி இசையை அனிருத் வாசித்து காட்ட பிரமாதம் என்று செய்கையில் கூறுகிறார் தேவா . தேவா தற்போது இசையமைப்பதை விட்டுவிட்டார் ஆனாலும் தனது காந்த குரலிற்கு ஓய்வு கொடுக்காமல் பல பாடல்களில் பாடி வருகிறார் .

அனிருத் தர்பார் படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் இசையமைத்து வருகிறார் .மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கும் அனிரூத்தே இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X