twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "பொண்ணுங்கள தொட்டா கொளுத்துவேன்"... எச்சரிக்கும் தாதா 87!

    சாருஹாசன் நடித்துள்ள தாதா 87 படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ளது.

    |

    சென்னை: திரைப்படங்கள் தொடங்கும் முன் வெளியிடப்படும் புகையிலை எச்சரிக்கையுடன் சேர்த்து பெண்களை அனுமதியின்றி தொடக்கூடாது என்ற வாசகத்தையும் வெளியிட வேண்டும் என தாதா 87 படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    கலை சினிமாஸ் சார்பில் கலைசெல்வன் தயாரித்துள்ள படம் தாதா 87. இப்படத்தை அறிமுக இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார். படத்தின் நாயகனாக சாருஹாசன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்துள்ளார். மேலும், ஜனகராஜ், ஆனந்த் உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளனர்.

    Dhadha 87 is a film for women

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகை கவுதமி, ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதில் பேசிய படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ, திரைப்படங்கள் தொடங்கும் முன் வெளியிடப்படும் புகையிலை எச்சரிக்கையுடன் சேர்த்து பெண்களை அனுமதியின்றி தொடக்கூடாது என்பதையும் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    விழாவில் அவர் பேசியதாவது, "இந்த படம் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக பேசும் படம். படத்தின் டிரெய்லரில் பொண்ணுங்கள தொட்டா கொளுத்துவேன் என சாருஹாசன் பேசும் வசனம் மிகப்பெரிய டிரென்டிங் ஆனது.

    Dhadha 87 is a film for women

    இந்த படத்தில் நடிக்க வேண்டும் என சாருஹாசன் சாரை கேட்ட போது, சிறிது தயக்கத்திற்கு பிறகு ஒப்புக்கொண்டார். அவருக்கு உடலில் பல பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால் அதை கேமராவுக்கு முன் காட்ட மாட்டார். அவரது கண்களில் எப்போதும் ஒரு தீ இருக்கும்.

    தற்போது நாட்டில் நடக்கும் சம்பவங்கள் மிக அதிர்ச்சியாக இருக்கிறது. நம் வீட்டு பெண் குழந்தைகளை தொடர் கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு அது ஜெயில் போல் இருக்கிறது. குட் டச் பேட் டச் என்பதை பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு தான் அதிகம் கற்றுத்தர வேண்டும்.

    அதேபோல சென்சார் போர்டுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், அரசு அனுமதியுடன் விற்கப்படும் புகையிலை, மது ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள் என எச்சரிக்கை வாசகம் போடுகிறோம். அதேபோல பெண்களை அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றமாகும் என ஏன் போடக்கூடாது. இதுகுறித்து அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் "என விஜய் ஸ்ரீ கேட்டுக்கொண்டார்.

    English summary
    The Dhadha 87 movie director Vijay sri demanded the censor board to allow to place a statuory warning message "Abusing women is a crime" in his film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X