6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் தனுஷ்,அனிருத் கூட்டணி!

சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் வெளியான படத்தில் இடம்பெறும் பாடல்களுக்காகவே படம் வேற லெவல் ஹிட்டடித்தது.

3, வேலையில்லா பட்டதாரி, மா, தங்க மகன் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றி வந்த தனுஷ் அனிருத்துக்கு இடையே சிறு மனஸ்தாபங்கள் பட்டு விட்டதாகவும் அதன்பிறகு படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றுவதை விரும்பவில்லை எனக் கூறப்பட்டது

இந்த நிலையில் யாரடி மோகினி பட இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கும் புதிய திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது இதில் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகி இருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

இசையமைப்பாளராக அறிமுகம்

இசையமைப்பாளராக அறிமுகம்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் அனிருத் முதன்முறையாக தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில்தான் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.தனுஷின் நெருங்கிய உறவுக்காரரான அனிரூத் சிறுவயதிலிருந்தே இசை அமைப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர். அதை அருகிலிருந்த பார்த்த நடிகர் தனுஷ் 3 படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தை அறிமுகப்படுத்தி அழகு பார்த்தார்.

கொலவெறி பாடல்

கொலவெறி பாடல்

3 (த்ரீ ) காதல் திரைப்படமாக இருந்தாலும் அதில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் வைரலாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. இந்த பாடல் இன்றுவரை இணையதளத்தில் ஓயாமல் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. "3 "சுமாரான வெற்றியைப் பெற்று இருந்தாலும் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்று முதல் படத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றார் அனிருத்.

 வேலையில்லா பட்டதாரி

வேலையில்லா பட்டதாரி

இதைத் தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் இணைந்து பணியாற்றிய வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்க மகன் போன்ற படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக வேலையில்லா பட்டதாரி அந்த ஆண்டு வெளியான மிகப் பெரிய வசூல் படமாக கொண்டாடப்பட்டது. தனுஷுக்காகவே இசையமைத்தது போல வேலையில்லா பட்டதாரி படத்தில் அனைத்து பாடல்களுக்கும் மிகவும் வித்தியாசமான இசை அமைத்திருப்பார் அனிருத். இதனாலேயே இவர்களை ரசிகர்கள் "டிஎன்ஏ"என அழைத்து வந்தனர்.

டிஎன்ஏ கூட்டணி

டிஎன்ஏ கூட்டணி

2015ஆம் ஆண்டு வெளியான தங்கமகன் படத்திற்கு பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக தனுஷ் மற்றும் அனிருத் எந்தவொரு திரைப்படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை அதற்கு காரணமாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சிறு மனஸ்தாபங்கள் தான் எனக் கூறப்பட்டது. அதனால்தான் இருவரும் இணைந்து பணியாற்றுவது இல்லை என அரசல் புரசலாக பேச்சு அடிபட்டது. தனுஷ் அனிருத் கூட்டணிக்கென்றே பல கோடி ரசிகர்கள் இருக்க மீண்டும் இந்த கூட்டணி இணைய வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்தனர்.

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

இந்த நிலையில்தான் அட்டகாசமான அப்டேட் இப்பொழுது வெளியாகி உள்ளது. ரசிகர்களின் காத்திருப்புக்கு பலனாக தனுஷ்-அனிருத் மீண்டும் இணைய இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. யாரடி மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கும் புதிய திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க "திருச்சிற்றம்பலம்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மூன்று கதாநாயகிகள்

மூன்று கதாநாயகிகள்

டைட்டில் போஸ்டருடன் கூடிய இந்த அட்டகாசமான அறிவிப்பு இப்பொழுது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. கதாநாயகிகளாக பிரியா பவானி சங்கர், நித்யாமேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குனர் பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்க நேற்று இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு "டிஎன்ஏ" கூட்டணி இணைவதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

நவீன இசைக் கருவிகள்

நவீன இசைக் கருவிகள்

அனிருத் இசையமைத்த வித்தியாசமான பாடல்கள் பல இளைஞர்களை சுண்டி இழுத்து தன் வசம் வைத்துள்ளார். அனிருத் மற்றும் தனுஷ் காம்போ எப்படிப்பட்ட பாடல்கள் இந்த முறை கொடுப்பார்கள் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பாக ஒய் திஸ் கொலவெறி பாடல் போல சர்வதேச அளவில் ஹிட் அடிக்கும் ஒரு புதிய பாடலை கொடுப்பார்களா என்ற கேள்வி நிறைய பேர் மனதில் எழுந்துள்ளது .அனிருத் என்றால் கொஞ்சம் டெக்னோ மற்றும் ஜாஸ் கலந்த நவீன இசைக் கருவிகள் மூலம் வித்தியாசமான இசையை கொடுத்து தனுஷின் எளிமையான பாடல் வரிகளுடன் டியூன் அமைத்து விஸ்வரூப வெற்றி அடைவார்கள் என்று அவர்களது ரசிகர்கள் சொன்னாலும் இந்த முறை புது ஐடியாவுடன் வேற லெவல் பீ ஜீ எம் மற்றும் புது விதமான ரிதம்ஸ் வரும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர் .

Recommended Video

Dhanush -யை வெச்சி செய்த நீதிபதி 2 நாளில் 30 லட்சம் கட்டுங்க! | Thalapathy Vijay, Rolls Royce
வாழ்த்துக்கள் சொல்லிய...

வாழ்த்துக்கள் சொல்லிய...

மித்ரன் ஜவஹர் மற்றும் தனுஷ் இருவரும் நீண்ட நாளைய நண்பர்கள் . இவர்கள் இருவருக்கும் இடையே சிறுசிறு மனக்கசப்புகள் ஏற்பட்டு கொஞ்ச காலம் ஒருவருக்கு ஒருவர் சந்திக்காமல் பேசாமலும் இருந்ததாக பலரும் சொன்னார்கள். ஆனால் உண்மையான நட்பு எத்தனை நாள் பேசாமல் இருந்தாலும் நட்பு மாறாது என்பதை நிரூபணம் செய்யும் விதமாக இவர்கள் இருவரும் இணைந்து கொடுக்கும் புதிய படைப்பு மாபெரும் வெற்றியடைய இவர்களுக்கு பொதுவான மியூச்சுவல் பிரண்ட்ஸ் பலரும் பல விதத்தில் வாழ்த்துக்கள் சொல்லிய வண்ணம் உள்ளனர் . அனிருத் தனுஷ் மித்ரன் ஜவஹர் என்ற இந்த கூட்டணியை ஒரு சிறப்பான தரமான திரைப்படத்தை கண்டிப்பாக தருவார்கள் என்று நம்புவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X