தனுஷ் ஸ்டைலில் ஒரு சூப் பாட்டு.. ஆனால் இந்த முறை நண்பனுக்கு.. குபேரா முதல் பாடல் ரிலீஸ் எப்போ தெரியுமா
சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள படங்கள் என்றால் அது இட்லி கடை மற்றும் குபேரா ஆகியவைதான். இதில் குபேரா படம்தான் முதலில் ரிலீஸ்க்கு தயாராக இருந்தது. இப்படி இருக்கும்போது, குபேரா படத்தின் புரோமோசனை தொடங்கியுள்ளது படக்குழு. சேகர் கம்முல்லா இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் முதல் பாடலான போய்வா நண்பா பாடல் வரும் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தனுஷ் பாடியுள்ள இந்த பாடல் தான் படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்படும் முதல் பாடல் ஆகும். பாடலின் ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

குபேரா படம் வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ளது. படத்தின் இயக்குநர் சுரேஷ் கம்முல்லா தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர். அதேபோல், தெலுங்கு திரையுலகில் இருக்கும் சூப்பர் ஸ்டாரான நாகர்ஜுனா, நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே வாத்தி என்ற படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கில் கால் பதித்து அதில் வெற்றியும் பெற்றார் தனுஷ். இந்நிலையில் குபேரா படத்தின் மூலமும் தனுஷ் தெலுங்கில் ஹிட் கொடுக்க தயாராகிவிட்டார்.
தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளியானது. ஒன்று கேப்டன் மில்லர், மற்றொன்று ராயன். இதில் ராயன் தனுஷின் 50வது படம். ராயன் படத்தை தனுஷே எழுதி இயக்கினார். படம் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது மட்டும் இல்லாமல் இந்த ஆண்டும் இவரது நடிப்பில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது இதுவரை உறுதியாகியுள்ளது. ஒன்று வரும் ஜூன் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படமான குபேரா. மற்றொன்று அக்டோபர் முதல் தேதியில் ரிலீஸ் ஆகவுள்ள படமான இட்லி கடை.
இதில் இட்லி கடை படத்தை தனுஷ் எழுதி இயக்கியது மட்டும் இல்லாமல் நடிக்கவும் செய்துள்ளார். இந்த படத்தின் மீது மொத்த திரையுலகிற்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இது இல்லாமல் தற்போது பாலிவுட் படத்திலும் ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இவர் தனது 56வது படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் இணையவுள்ளார் என்ற அறிவிப்பு கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. குறிப்பாக தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியான கர்ணன் படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தனுஷின் 56வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
இப்படியான நிலையில் குபேரா படத்தின் முதல் பாடலுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் இந்த பாடலை எழுதியுள்ளார். மேலும் இந்த பாடலை தனுஷே பாடியும் உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தனுஷ் பாடலைப் பாடியுள்ளார். பாடல் மொத்தம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தியில் ரிலீஸ் ஆகவுள்ளது.


Click it and Unblock the Notifications











