தனுஷ் நிச்சயதார்த்தத்தில் ஆட்டம் போடும் சாரா அலிகான்...அத்ரங்கி ரே கலக்கல் பாடல் வெளியீடு

மும்பை : டைரக்டர் ஆனந்த் எல் ராய் இயக்கி உள்ள படம் அத்ரங்கி ரே. முக்கோண காதல் கதையான இந்த படத்தில் அக்ஷய் குமார், சாரா அலி கான், தனுஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Dhanushs Atrangi Re movie Chaka Chak song out

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை டி சீரிஸ், ஆனந்த் எல் ராய், கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் மற்றும் கலர் எல்லோ ப்ரொடக்ஷன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் 24 ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீசாக உள்ளது.

இந்தி மற்றும் தமிழில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழில் இந்த படத்திற்கு கலாட்டா கல்யாணம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் தமிழ் டைட்டில் வெளியிடப்பட்டு, தனுஷ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் அத்ரங்கி ரே படத்தின் முதல் பாடலான சாக்கா சாக் என துவங்கும் அசத்தல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தனது கணவர் தனுஷிற்கு வேறு ஒரு பெண்ணுடன் நடக்கும் நிச்சியதார்த்த விழாவில் மனைவி சாரா அலி கான் துள்ளல் நடனம் ஆடுவதை போல் கலர்ஃபுல்லாக இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

நியான் க்ரீன் புடவையில் கிளாமராக சாரா அலி கான் நடனம் ஆடுவதை, ஓரமாக நின்று பார்க்கிறார் தனுஷ். தென்னிந்திய முறைப்படி பிரம்மாண்டமான வீட்டில் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அந்த விழாவில் சாக்கா சாக் பாடலுக்கு சாரா நடனமாடுவதாக இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து யானை தந்தத்தின் சரிக்கியபடி வரும் அக்ஷய் குமார். அவரை ஓடிச் சென்று கட்டிப்பிடிக்கும் ஒரு பெண் என செம அட்டகாசமாக இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், சாரா அலி கான் போன்றோர் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தாலும், சாக்கா சாக் பாடலுக்கு இர்ஷத் கமில் தான் இசை அமைத்துள்ளார். செம ஃபாஸ்ட் பீட் இசைக்கு, ஷ்ரேயா கோசல் குரல் கொடுத்து பாடி உள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகருமே இதுவரை பார்த்திராத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாக டைரக்டர் ஆனந்த் ராய் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X