தனுஷின் அக்கா மகனுக்கு ஜோடியான அனிகா.. NEEK படத்தின் கோல்டன் ஸ்பேரோ பாடல் டிரெண்டிங்கில் தெறிக்குதே!
சென்னை: தனுஷ் பாடினாலே அந்த பாடல் டிரெண்டிங்கில் டாப் இடத்தை பிடித்து விடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் தனுஷ் பாடிய 'கோல்டன் ஸ்பேரோ' தற்போது இளைஞர்களின் பிளே லிஸ்ட்டில் இமிடியேட்டாக இடம்பெற்று டிரெண்டிங்கை தெறிக்கவிட்டு வருகிறது.
தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் ஸ்பெஷல் அப்பியரன்ஸில் மடிசார் கட்டிய மாமியாக வந்து கோல்டன் ஸ்பேரோ பாடலில் குத்தாட்டம் வேறு போட்டுள்ளார்.

தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தை சுருக்கமாக NEEK என ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், கோல்டன் ஸ்பேரோ பாடல் யூடியூபில் செய்து வரும் சாதனைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
ஹீரோவான தனுஷின் அக்கா மகன்: இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன் இயக்குநராகவும் இளைய மகன் தனுஷ் நடிகராகவும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் கலக்கி வருகின்றனர். தனுஷின் சகோதரிகளான விமலா கீதா மற்றும் கார்த்திகா தேவி இருவரும் மருத்துவம் படித்து மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில், விமலா கீதாவின் மூத்த மகன் பவிஷ் தற்போது தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.
அனிகா சுரேந்திரன் ஹீரோயின்: தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தை கஸ்தூரி ராஜா தயாரிப்பாளராக கவனித்து வருகிறார். வுண்டர்பார் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் பவிஷ் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், அவருக்கு ஜோடியாக அஜித்தின் ரீல் மகள் என ரசிகர்களால் அழைக்கப்படும் அனிகா சுரேந்திரன் நடித்து வருகிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பிடி சார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்கள் பட்டாளம்: பவிஷ், அனிகா சுரேந்திரன் மட்டுமின்றி லியோ படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், வெங்கடேஷ் மேனன், ரபியா காத்தூன் மற்றும் ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் அந்த படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
5 மில்லியன் வியூஸ்: ப. பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான கோல்டன் ஸ்பேரோ சமீபத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. அறிவு பாடல் வரிகளை எழுதிய நிலையில், ஜிவி பிரகாஷ், தனுஷ் உள்ளிட்ட பலர் இணைந்து பாடியுள்ளனர். பிரியங்கா மோகன் நடனமாடிய அந்த பாடல் இதுவரை 5.6 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டாகி வருகிறது.
தனுஷ் போலவே: தனுஷின் மகன் தான் இந்த படத்தின் ஹீரோவா என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு தனுஷின் அக்கா மகன் பவிஷும் அப்படியே ஸ்லிம்மாக மாமா தனுஷ் போலவே உள்ளார். தனுஷின் மகன் யாத்ரா இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இன்னொரு பாடலை எழுதியுள்ளாராம். போயட் தனுஷின் மகனும் போயட்டா என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். தனுஷின் மகன்களும் விரைவில் சினிமாவில் ஹீரோக்களாக வலம் வர வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











