காதல் ஃபெயிலா போச்சுடா.. கட்டம் போட்டு கலக்கும் தனுஷ் -ஜிவி பிரகாஷ் காம்போ.. NEEK 2வது சிங்கிள்!

சென்னை: நடிகர் தனுஷின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் வெளியானது ராயன் படம். இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் படத்திற்கு அவரது இசை மிகப் பெரிய பலத்தை கொடுத்தது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை உருவாக்கியுள்ளார் தனுஷ். இந்த படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் இட்லி கடை படமும் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

dhanush neek movie tamil cinema neek

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் அடுத்தடுத்து படங்கள் அவரது இயக்கத்தில் உருவாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் தன்னுடைய இயக்கத்தில் முதல் படமாக ப பாண்டி படத்தை இயக்கியிருந்தார். வயதான நபரின் இளம் வயது காதலை மையமாக வைத்து இந்த படம் வெளியாகி மிகச் சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து நடிப்பு, தயாரிப்பு என பிசியான தனுஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் ரிலீசாகி மிகச் சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில் படம் 100 கோடி கிளப்பில் இணைந்திருந்தது.

இயக்குநராக தனுஷ் அதிரடி: இந்த படத்தில் ஏஆர் ரஹ்மானின் இசை மிக சிறப்பான பலமாக அமைந்திருந்தது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். குறிப்பாக பாடல்கள் மிகப்பெரிய கவனம் பெற்றிருந்தன. படத்தின் வெற்றிக்கு பாடல்கள் மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தன. இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை உருவாக்கியுள்ளார் தனுஷ். இந்த படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் படத்தின் 2வது சிங்கள் வெளியாகியுள்ளது.

NEEK படத்தின் 2வது சிங்கிள்: ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படத்தின் கோல்டன் ஸ்பேரோ ஃபர்ஸ்ட் சிங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் ஆட்டம் போட்டிருந்தார். இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ள காதல் ஃபெயிலா போச்சுடா என்ற இந்த பாடல் மிகச் சிறப்பான வகையில் அமைந்துள்ளது. முன்னதாக தனுஷின் 3 படத்தின் ஒய் திஸ் கொலவெறி மோடில் இந்த பாடலும் உருவாகியுள்ளது. இந்த பாடலும் மிகச் சிறப்பான வகையில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

தனுஷ் எழுதி பாடிய பாடல்: சூப் சாங்காக உருவாகியுள்ள இந்த பாடலை நடிகர் தனுஷ் எழுதி, பாடியுள்ளார் இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாகியுள்ளார். மேலும் பிரியா வாரியர், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட இளைஞர்கள் பட்டாளம் சூழ படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் தனுஷ். படத்தில் தனுஷ் மற்றும் சரத்குமாரும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜரூராக நடந்துவரும் நிலையில் அடுத்ததாக இட்லி கடை படத்தின் சூட்டிங்கையும் விறுவிறுப்பாக இயக்கிவருகிறார் தனுஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X