சந்தோஷ் நாராயணனும் இல்ல.. இளையராஜாவும் இல்ல.. பா ரஞ்சித் அடுத்து கூட்டணி அமைக்கப்போவது இவரோடுதான்!

சென்னை: பா ரஞ்சித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்கப் போகும் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார்.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கினார் பா ரஞ்சித்.

5 படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன்

5 படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன்

சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. அமேஸான் பிரைம்மில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரஞ்சித் இயக்கிய இந்த 5 படங்களுக்கும் இசையமைத்தவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

ரஜினியின் படங்கள்

ரஜினியின் படங்கள்

இவர்களின் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக வலம் வந்தது. இருவருமே சினிமாவுக்கு அறிமுகமானது அட்டக்கத்தி படத்தின் மூலம் தான். அடுத்த பா ரஞ்சித் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற போது கூட டாப் இசையமைப்பாளருடன் தான் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

என்ஜாய் எஞ்சாமியால் வந்த விரிசல்

என்ஜாய் எஞ்சாமியால் வந்த விரிசல்

ஆனால் ரஜினியின் கபாலி, காலா ஆகிய இரண்டு படங்களுக்குமே இசையமைக்கும் வாய்ப்பை சந்தோஷ் நாராயணனுக்கு கொடுத்தார் ரஞ்சித். இந்நிலையில் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ மற்றும் ராப் பாடகர் தெருக்குரல் அறிவு கூட்டணியில் வெளியான என்ஜாய் எஞ்சாமி பாடலின் மூலம் இவர்களின் நட்பில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

கடுப்பான பா ரஞ்சித்

கடுப்பான பா ரஞ்சித்

உலகளவில் பெரும் ஹிட்டான அப்பாடலின் விளம்பரங்களில் தெருக்குரல் அறிவு ஓரம் கட்டப்பட்டது பா ரஞ்சித்துக்கு கோபத்தை உண்டாக்கியது. இதற்காக பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தார் பா ரஞ்சித். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த விளம்பரங்களில் தெருக்குரல் அறிவின் படங்கள் இடம் பெற்றது.

பிரிந்த கூட்டணி

பிரிந்த கூட்டணி

ஆனாலும் பா ரஞ்சித்தின் கோபம் தணியவில்லை போல. தனது அடுத்த படமான நட்சத்திரங்கள் நகர்கிறது படத்தில் சந்தோஷ் நாராயணன் பணியாற்றவில்லை என்றும் வேறொரு இசையமைப்பாளரை தேடி வருவதாகவும் படக்குழு கூறியது. மேலும் பா ரஞ்சித்தின் அடுத்தப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைக்கவுள்ளார் என்றும் கூறப்பட்டது.

புதிய கூட்டணி ஆரம்பம்

புதிய கூட்டணி ஆரம்பம்

இந்நிலையில் பா ரஞ்சித் நட்சத்திரங்கள் நகர்கிறது படத்திற்கு புதிய இசையமைப்பாளருடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தென்மா என்பவர் பா ரஞ்சித்தின் அடுத்த படைப்பான நட்சத்திரங்கள் நகர்கிறது படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு படங்கள் தயாரிப்பு

இரண்டு படங்கள் தயாரிப்பு

இசையமைப்பாளர் தென்மா பா.இரஞ்சித் தயாரித்த 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பா ரஞ்சித் ரைட்டர் என்ற படத்தையும் தனது உதவி இயக்குநரான சுரேஷ் மாரி இயக்கும் படத்தையும் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X