டாக்டர் படத்தின் உணர்வுபூர்வமான நெஞ்சமே வீடியோ பாடல்... வெளியிட்ட படக்குழு
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது டாக்டர் படம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என வெளியிடப்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பான வசூலை இந்தப் படம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் நெஞ்சமே பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

டாக்டர் படம்
நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த மாதத்தில் வெளியான படம் டாக்டர். திரையரங்குகளில் ரிலீசான இந்தப் படம் சிறப்பான வெற்றியையும் வசூலையும் பெற்றுள்ளது. திரையிடப்பட்ட அனைத்து திரையங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது.

வசூல்மழையை பொழியும் டாக்டர்
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் வசூலை வாரிக் குவித்துள்ளது. 3 வாரங்களை கடந்து திரையரங்குகளில் சிறப்பாக ஓடி வருகிறது. கொரோனாவை அடுத்து திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் வெற்றி தயாரிப்பாளர்களிடையே நம்பிக்கையை அளித்துள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பு
இந்நிலையில் இந்தப் படம் வரும் தீபாவளியையொட்டி நவம்பம் 4ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் அடுத்த நாள் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.
Recommended Video

நெஞ்சமே வீடியோ பாடல் வெளியீடு
படத்தில் டிவி தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். படத்தில் அவர்களது கேரக்டர்கள் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளன. இந்நிலையில் படத்தின் நெஞ்சமே என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

3வது பாடல்
கடந்த சில தினங்களில் படத்தின் இரு வீடியோ பாடல்களை படக்குழு வெளியிட்டது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் நெஞ்சமே என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. படத்தில் கடத்தப்பட்ட சாராவை தேடும் முயற்சியில் அனைவரும் ஈடுபடுவது இந்தப் பாடலில் தெரிகிறது.

அனிருத் இசை
பெண் குழந்தையை பறிகொடுக்கும் பெற்றோருக்கு ஆறுதல் என்பது கூறப்பட முடியாதது. அந்த வேலையை இந்தப் பாடலில் சிவகார்த்திகேயன் செய்கிறார். மேலும் அந்தக் குழந்தையை தேட அவர் மேற்கொள்ளும் முயற்சியும் பாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனிருத் இசையில் இந்தப் பாடல் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











