1000 ட்ரம்ஸ் கலைஞர்களுடன் நிகழ்ச்சி நடத்திய சிவமணி
சென்னை: ஆயிரம் ட்ரம்ஸ் இசைக் கலைஞர்களுடன் ட்ரம்ஸ் வாசித்து கின்னஸ் சாதனை செய்தார் சிவமணி.
மேடைக் கச்சேரி மட்டுமல்ல, ஆயிரம் படங்களுக்கு மேல் பல்வேறு இசை அமைப்பாளர்களிடம் ட்ரம்ஸ் வாசித்தவர் சிவமணி.

இப்போது அரிமா நம்பி என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார்.

உலக கின்னஸ் சாதனைக்காக சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 1000 ட்ரம்ஸ் கலைஞர்களுடன் ட்ரம்ஸ் வாசித்தார் சிவமணி. இடைவிடாமல் 11 நிமிடம் வாசித்த அந்த சாதனை நிகழ்ச்சி 'பாரத் புக் ஆஃப் ரெக்கார்டு' புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நீதிபதிகள் சங்கத்தின் தலைவரும் முதன்மை சிறப்பு நீதிபதியுமான வி.ராமமூர்த்தி பார்த்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இசையமைப்பாளர் சபேஷ் முரளி, கடம் வித்வான் விநாயக் ராம் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மெல்லிசை கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











