'என்னிடம் சீன் போட்ட ஹீரோயின்கள்'... இயக்குனர் பாக்யராஜின் காமெடி கலாட்டா!
தன்னிடம் சீன் போட்ட ஹீரோயின்கள் பற்றி இயக்குனர் பாக்யராஜ் கலகலப்பாக பேசினார்.
Recommended Video

சென்னை : ஹீரோயின்கள் போடும் சீனை தாங்க முடியாது என இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
அங்காடி தெரு மகேஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் என் காதலி சீன் போடுறா. ராம்சேவா இயக்கியுள்ள இப்படத்தில் ஷாலு ஹீரோயினாக நடித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாக்யராஜ் கலந்துகொண்டு இசையை வெளியிட்டார்.

விழாவில் பேசிய அவர், சினிமாவில் ஹீரோயின்கள் எப்படி எல்லாம் சீன் போடுவார்கள் எனக் கூறி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது,
"என் காதலி சீன் போடுறா என்று அட்டகாசமாகத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள். பாடல்களும் பாடல்காட்சிகளும் நன்றாக இருக்கிறது. டிரையலரிலேயே நகைச்சுவை நன்றாக இருக்கிறது.
23 நாளில் முழுப்படத்தையும் முடித்திருக்கிறீர்கள்.எதற்காகவும் நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. சோதனைகள் தான் சாதனைகளாக மாறும்.
சீன் போடுறது என்று சொன்னவுடன் எனக்கு நிறைய நியாபங்கள் வந்துவிட்டன. எனது படங்களில் நடித்துள்ள நாயகிகள் நிறைய பேர் சீன் போட்டிருக்கிறார்கள்.
படத்தில் புக் செய்வதற்காக நாயகியின் வீட்டிற்கு போகும் போது நிறைய சீன் போடுறார்கள். சும்மா தான் இருப்பார்கள். ஆனால் தேதி பிரியாக இருக்கிறதா என டைரியை புரட்டிப் பார்ப்பார்கள்.
அதுபோல ஆண்களும் சீன் போடுவது சகஜம். நான் நாடகம் நடத்திய காலத்தில், ஹீரோயின் வரும் ரிகர்சல்களில் ஊர் பெரிசுகள் நிறைய பேர் வந்து சும்மாவே சீன் போடுவார்கள்", என பாக்யராஜ் பேசினார்.


Click it and Unblock the Notifications











