என் நெஞ்சைத் தொட்டாயே!
என் நெஞ்சைத் தொட்டாயே திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று ஏ.வி.எம் அரங்கத்தில் நடைபெற்றது. பிரபல பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட தொழிலதிபர் செந்தில்குமார் பெற்றுக் கொண்டார்.
குரு சூர்யா மூவிஸ் தயாரிப்பில் "என் நெஞ்சைத் தொட்டாயே" திரைப்படம் முற்றிலும் புதுமுகங்களுடன் கிராமிய நகர்புற பின்னணியில் பின்னப்பட்ட கதைக்களம்.இதை சு.மு. அன்புச் செல்வன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ் மகன்
தன் மகனை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக்க வேண்டும் என்று ஆசைப்படும் தந்தை. மகனை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறான். மகன் கலெக்டர் ஆகிறான். தந்தையின் ஆசையை நிறைவேற்றுகிறான். மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்கிறான்.
தந்தை சந்தோஷமடைகிறார். ஆனால் ஒரு சூழலில் தன் தாய் - தந்தையையே சிறையில் தள்ளுகிறான் மகன். இதில் தந்தையின் நிலை என்ன என்பதே படத்தின் கதை

ரவிக்குமார்-பவித்ரா
பல குறும்படங்கள், மற்றும் விளம்பர படங்களிலும் நடித்த ரவிக்குமார் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். மிஸ் பெங்களுரு பட்டத்தை வென்ற பவித்திரா இதில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

பாட்டிகளுக்கு நீச்சல் போட்டி
85வது முதியவர்களை சுடிதார் அணிவித்து நீச்சல் போட்டியில் 15 அடி ஆழத்தில் நீச்சல் அடிக்க வைத்திருக்கிறார்.

சண்டைக் காட்சிகள்
மேலும் சண்டை காட்சிகளில் டூப் இன்றி சண்டையிட்டு படத்தை குறுகிய காலத்தில் இயக்கியுள்ளார். சு.மு. அன்புசெல்வனுக்கு இது முதல் படம். யு. தனலட்சுமி அவர்கள் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இரட்டை இசை அமைப்பாளர்கள்
நாகா - ஜீவன்மயில் இரு இசை அமைப்பாளர்கள் அறிமுகமாகின்றனர். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இயற்கை எழில்
பொள்ளாச்சி, தஞ்சாவூர், திருவாரூர் அதை சுற்றியுள்ள இடங்களில் இயற்கை எழில் மிக்க இடங்களில் யதார்த்தமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்பக் கலைஞர்கள்
இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சு.மு.அன்புச்செல்வன். தயாரிப்பு: யு. தனலட்சுமி யு. சிரஞ்சீவி,யு. பரத்ராஜ்
இசை:நாகா - ஜீவன் மயில் இணை இயக்கம்:ஆ. ரகுராம், ஒளிப்பதிவு : மித்ரன், எடிட்டிங்:ராம்நாத்,மக்கள் தொடர்பு: செல்வரகு


Click it and Unblock the Notifications











