எனக்குள் ஒருவனில் சித்தார்த் பாடிய 15வது பாடல்…
கமல் நடித்து வெளிவந்துள்ள படத்தின் தலைப்பில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் படம் எனக்குள் ஒருவன். இப்படத்தில் தீபா சன்னிதி நாயகியாக நடிக்கிறார். பிரசாத் ராமர் இயக்குகிறார்.
லூசியா என்ற பெயரில் கன்னடத்தில் ஆயிரம் பேர் நிதியுதவியுடன் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தமிழில் சிவி குமார் தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

நடிகர்கள் பட்டாளம்
எனக்குள் ஒருவன் இசை வெளியீட்டு விழாவில் நடிகை குஷ்பு, சமந்தா, நடிகர்கள் விஜய் சேதுபதி, நரேன், ஜான் விஜய், அருண்பாண்டியன் இயக்குனர்கள் சீனு ராமசாமி, பவன்குமார், வசந்த பாலன், நலன் குமாரசாமி தயாரிப்பாளர்கள் சிவா, மதன், ஞானவேல் ராஜா, வெண்கோவிந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
புகழ்ந்த வசந்தபாலன்
இசை வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குநர் வசந்த பாலன், இந்த படத்தின் கதை ஏற்கனவே எனக்குத் தெரியும். இந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் எப்படி நடிப்பார் என்று யோசித்தேன். ஆனால், படம் பார்த்த பின் அதனை சித்தார்த் உடைத்தெறிந்துள்ளார் என்று இயக்குனர் வசந்தபாலன் பேசினார்.
குஷ்பு-சமந்தா
சித்தார்த் பேசும்போது, "எனக்கு மிகவும் பிடித்த குஷ்பு மற்றும் சமந்தா ஆகியோர் விழாவிற்கு வந்துள்ளனர். மிகவும் சந்தோஷம் என்றார். இந்த நடிகர் என்றால் இப்படித்தான் நடிப்பார் என்று எண்ணம் உண்டு. இதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்று 18 மாதங்களாக முயற்சி செய்து இதில் நடித்துள்ளேன்" என்றார்.
சினிமா பைத்தியம்
சமந்தா பேசும்போது, சித்தார்த் ஒரு சினிமா பைத்தியம். அவர் எப்போதும் சினிமாவைப் பற்றியே யோசிப்பார். மேலும் இந்த படத்தின் பாடல் ஆசிரியர்கள், இசை அமைப்பாளருக்கு என்னுடயை வாழ்த்துக்கள் என்று கூறினார்.
பாடல் பாடிய சித்தார்த்
எனக்குள் ஒருவன் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சித்தார்த் இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். ‘பிரபலமாகவே...' எனத் தொடங்கும் இப்பாடலை முத்தமிழ் எழுதியுள்ளார். சித்தார்த் குரலில் வெளிவரவிருக்கும் இப்பாடல் அவர் பாடும் 15-வது பாடலாகும்.
சித்தார்த்தின் பாடிய பாடல்
தமிழில் ஏற்கனவே சந்தோஷ் சுப்பிரமணியம், காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என்.எச்.4, ஆகிய படங்களில் பாடியுள்ளார். தெலுங்கிலும் பொம்மரிலு உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார்.
ஏண்டி இப்படி
இந்தப் படத்தில் ஏண்டி இப்படி எனத் தொடங்கும் குத்துப் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணனே இந்தப் பாடலை பாடியுள்ளார்.
பூ அவிழும் பொழுதில்
அழகான மெலடியாய் காதில் விழுகிறது பூ அவிழும் பொழுதில் பாடல். சந்தோஷ் நாராயணன், பிரதீப் பாடியுள்ளனர். இந்தப் பாடலைத் தவிர மாணிக்க விநாயகம் பாடிய குட்டிப்போச்சி என்ற பாடலையும், பாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











