அனிருத் குரலில் குக் வித் கோமாளி அஸ்வினின் க்யூட் பொண்ணு பாடல் நாளை ரிலீஸ்.. ரசிகர்கள் குஷி!
சென்னை: என்ன சொல்ல போகிறாய் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின்.
இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின் கூட்டணியில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் பாடல்கள் எல்லாம் வேற லெவல் ரொமான்ட்டிக் மோடில் உருவாகி வருகின்றன.
அந்த படத்தில் இடம்பெற்றுள்ள க்யூட் பொண்ணு பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார் ராக்ஸ்டார் அனிருத்.

குக் வித் கோமாளி அஸ்வின்
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்ட அஸ்வின் அந்த நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்துள்ளார். குக் வித் கோமாளி முடிந்து அடுத்ததாக பிக் பாஸ் வருவாரா? அஸ்வின் என பிக் பாஸ் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்க ஹீரோவாக மாறி விட்டார் அஸ்வின்.

எக்ஸ் பாய் ஃபிரண்ட்
என்ன சொல்ல போகிறாய் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் அஸ்வின் அதற்கு முன்னதாக சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ஓ மணப்பெண்ணே படத்தில் பிரியா பவானி சங்கரின் எக்ஸ் பாய் ஃபிரண்டாக நடித்து அசத்தி இருப்பார். அந்த படத்தில் இரண்டாவது ஹீரோவாகவே அஸ்வின் அசத்தி இருந்தார்.

ரசிகர்கள் வெயிட்டிங்
துணை நடிகராக நடித்து வரும் அஸ்வினை ஹீரோவாக பார்க்க குக் வித் கோமாளி ரசிகர்கள் மொத்தமும் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடித்து வருகிறார்.
க்யூட் பொண்ணு
என்ன சொல்ல போகிறாய் படத்திற்கு இரட்டை இசையமைப்பாளர்களான விவேக் மெர்வின் இசையமைத்து வருகின்றனர். க்யூட் பொண்ணு எனும் பாடல் ரெடியாகி வருகிறது. அஸ்வின் எங்கே சென்றாலும் அந்த பாடல் அவர் காதுகளுக்கு ஒலிப்பது போன்ற க்யூட்டான வீடியோவை தற்போது ஷேர் செய்துள்ளார். நவம்பர் 20ம் தேதி அந்த பாடல் ரிலீஸ் ஆகிறது.

அனிருத் குரலில்
சக இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் படங்களில் இலவசமாக பாடி கொடுத்து வருகிறார் ராக்ஸ்டார் அனிருத். விவேக் மெர்வின் இசையில் கடைசியாக வெளியான சுல்தான் பட அறிமுக பாடலை பாடி கொடுத்த அனிருத் என்ன சொல்ல போகிறாய் படத்தின் செகண்ட் சிங்கிளான க்யூட் பொண்ணு பாடலை பாடி உள்ளார். அஸ்வின் நடனமாடினாலே அந்த பாடல் ஹிட் ஆகும். அனிருத்தின் குரல் வேற இந்த பாடலில் இடம்பெற்றுள்ளது ஹிட்டுக்கு சொல்லவா வேண்டும்!


Click it and Unblock the Notifications











