காதல் காட்சிகளில், என்னை விட என் மகன் சிறப்பாக நடிக்கிறான்...: நடிகர் கார்த்திக் புகழாரம்

சென்னை: காதல் காட்சிகளில், தன்னை விட தன் மகன் சிறப்பாக நடிக்கிறான் என நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டுகளாக அவுட்டோர் யூனிட் துறையில் இருந்து வரும் ரவிபிரசாத் நிறுவனம் முதன்முதலாக, 'என்னமோ ஏதோ' என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை ரவி தியாகராஜன் இயக்க நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். நிகிஷா படேல், ரகுல் பிரீதிசிங் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடந்தது. முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் ரவிகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து விழாவில், நடிகர் கார்த்திக் பேசியதாவது:-

துணிச்சலான முயற்சி...

துணிச்சலான முயற்சி...

இது, ஒரு தெலுங்கு படத்தை தழுவிய கதை. அந்த தெலுங்கு படம், அப்படி ஒரு துணிச்சலான முயற்சி. கனமான காதல் கதை. படத்தை பார்த்ததுமே அதில் கவுதமை நடிக்க வைக்க முடிவு செய்தேன். தினமும் படப்பிடிப்புக்கு போய் வந்ததும், அன்று படமாக்கிய காட்சிகள் பற்றி கவுதம் என்னிடம் சொல்வார்.

லெஜண்ட் மகன்...

லெஜண்ட் மகன்...

இப்போது உள்ள கதாநாயகிகளைப் பார்க்கும்போது, எனக்கு வெட்கமாக இருக்கிறது. என்னை விட, அவர்கள் உயரமாக இருக்கிறார்கள். காதல் காட்சிகளில் என்னை விட, என் மகன் சிறப்பாக நடிக்கிறார். ‘லெஜண்ட்' மகன் ‘லெஜண்ட்' ஆகத்தான் இருப்பார்.

திறமையான இளைஞர்கள்...

திறமையான இளைஞர்கள்...

இப்போதையை தமிழ் சினிமா அதிசயிக்கிற வகையில் பல சாதனைகளை செய்து வருகிறது. தமிழ் சினிமாவில், திறமையான இளைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது.

சந்தோஷமான மாற்றங்கள்....

சந்தோஷமான மாற்றங்கள்....

நானும் 33 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இந்த மேடையில் இருப்பவர்கள் அனைவரும் என் உறவுகள். கொஞ்ச காலமாக நான் சினிமாவை விட்டு தொலைவில் இருக்கிறேன். நடக்கிற மாற்றங்கள் சந்தோஷம் தருகிறது.

என் குழந்தை....

என் குழந்தை....

ஆறு அடி இரண்டு அங்குலம் உயரம் உள்ள என் குழந்தை கவுதமை உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறேன். அவரை ஆசீர்வதியுங்கள்' என இவ்வாறு கார்த்திக் பேசினார்.

விழாவில் கலந்து கொண்டவர்கள்....

விழாவில் கலந்து கொண்டவர்கள்....

விழாவில், படத்தின் கதாநாயகன் கவுதம் கார்த்திக், கதாநாயகிகள் நிகிஷா படேல், ரகுல் ப்ரீத்சிங், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் டி.சிவா, கே.ஈ.ஞானவேல்ராஜா, பிலிம்சேம்பர் பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், பட அதிபர்கள் கே.ராஜன், எச்.முரளி, இசையமைப்பாளர் டி.இமான், பாடல் ஆசிரியர் கார்க்கி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், ஸ்டண்ட் மாஸ்டர் ரவி தியாகராஜன், டைரக்டர் ரவிதியாகராஜன், டைரக்டர் சரவணன் ஆகியோரும் பேசினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X