ஆடியோ ரிலீஸ் முன்னரே ஹிட்டான "இரண்டாம் உலக போரின் கடைசிகுண்டு" பாடல்

சென்னை : அட்டகத்தி தினேஷ் - கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகவுள்ள "இரண்டம் உலக போரின் கடைசிகுண்டு" திரைப்படத்தை இயக்கியுள்ளார் புதுமுக இயக்குநர் அதியன் ஆதிரை. இவர் கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவியாளர் ஆவார்.
நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 11 ம் தேதி வெளியாகவுள்ளது என்று அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

இப்படத்தில் பிக் பாஸ் சீசன் 2 டைட்டில் வின்னர் ரித்விகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் முனீஷ்காந்த், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

erandam ulaga porin kadaisi kundu audio release on November 11

இப்படத்திற்கு "U " சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்சகரமான செய்தியை இயக்குனர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். கடந்த நவம்பர் 4 ம் தேதி படத்தின் மாவுலியோ!மாவுலி!...பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

பல பிரபலமான இசை ஆல்பங்களை வெளியிட்ட தென்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் ப்ரோடக்ஷன்ஸ் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் படம் நவம்பர் மாதம் வெளியிடப்படும் என திட்டமிட்டுள்ளனர்.

தணிக்கை குழுவினர் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

படத்தின் வெளியீடு குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும். இப்படம் மற்ற படங்களில் இருந்து ஒரு வித்யாசமான அனுபவத்தை கொடுக்கும்.
இதை படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X