லிங்கா ஆடியோ உரிமையை ஏழு கோடிக்கு வாங்கியது ஈராஸ்!
ரஜினியின் லிங்கா படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ரூ 7 கோடிக்கு வாங்கியிருக்கிறது சவுந்தர்யா தலைமையிலான ஈராஸ் நிறுவனம்.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் லிங்கா படம் ஷூட்டிங் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
இந்தப் படத்தை பலத்த போட்டிக்கிடையில் ஈராஸ் நிறுவனம் ரூ 165 கோடிக்குப் பெற்றுள்ளது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்று வெளியாகிவிட்டது (ஒன்இந்தியாவில் நேற்றே செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்).
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ 7 கோடிக்கு ஈராஸ் நிறுவனத்துக்கே விற்கப்பட்டுள்ளது.
ஆடியோ விற்பனை என்பதே பூஜ்யமாகிவிட்ட இன்றைய சூழலில், லிங்கா இசைக்கு ரூ 7 கோடி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஈராஸ் நிறுவனத்தின் தென்னகப் பிரிவு மற்றும் டிஜிட்டல் துறைக்கு சவுந்தர்யா ரஜினிதான் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் வரும் நவம்பர் 16-ம் தேதி சென்னை சத்யம் சினிமாஸில் வெளியாகின்றன.


Click it and Unblock the Notifications












