சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்… 5 மொழிகளில் வெளியானது ‘‘வாடா தம்பி“ பாடல் !

சென்னை : எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் பாடலான வாடா தம்பி பாடலின் லிரிக் வீடியோ அனைத்து மொழிகளிலும் வெளியானது.

தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.

இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பொள்ளாச்சி விவகாரம்

பொள்ளாச்சி விவகாரம்

பொள்ளாச்சி விவகாரத்தை மையமாக வைத்து இத்திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியவுடன் கடந்த செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

5 மொழிகளில்

5 மொழிகளில்

இதையடுத்து, எதற்கும் துணிந்தவன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அனைத்து மொழிகளிலும்

அனைத்து மொழிகளிலும்

இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் பாடலான வாடா தம்பி பாடலின் லிரிக் வீடியோ அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு இத்திரைப்படம் வெளியாக உள்ளதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X