டோவினோவின் ஜீவாம்சமாய்.. தமிழ் மலையாள கலவையில் உருவான மல்லுவுட் பாடல் கவர்!
மலையாளத்தில் வெளியாக இருக்கும் ''தீ வண்டி'' படத்தின் ''ஜீவாம்சமாய்'' என்ற பாடலுக்கு பிலிமிபீட் மலையாளம் முதன்முறையாக இன்று கவர் சாங் (COVER SONG) ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை: மலையாளத்தில் வெளியாக இருக்கும் ''தீ வண்டி'' படத்தின் ''ஜீவாம்சமாய்'' என்ற பாடலுக்கு பிலிமிபீட் மலையாளம் முதன்முறையாக இன்று கவர் சாங் (COVER SONG) ஒன்றை வெளியிட்டுள்ளது.
துல்கர், நிவின், பகத் சேட்டன்களுக்கு அடுத்து மல்லுவுட்டில் இணைத்து இருக்கும் க்யூட் நாயகன் டோவினோ தாமஸ். மலையாளத்தில் அடுத்த மாதம் டோவினோ தாமஸ் நடிப்பில் ''தீ வண்டி'' என்ற படம் வெளியாகிறது. இந்த படத்தின் பாடல், இப்போதே இணையத்தில் படு வைரலாகி உள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ''ஜீவாம்சமாய்'' என்ற பாடல் யூ டியூப்பில் மாஸ் ஹிட் அடித்து இருக்கிறது. இந்த நிலையில் அந்த பாடலுக்கு தற்போது ''கவர் சாங்'' வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை பெங்களூரில் சாப்டவேர் பொறியாளராக பணிபுரியும் அஜித் பப்பாஸ் பாடியிருக்கிறார். இது அவரின் முதல் பாடலாகும். முழுக்க முழுக்க இளைஞர்களின் கூட்டணியில் இந்த பாடல் உருவாகியுள்ளது. இதில் சில வித்தியாசமான அம்சங்கள் அடங்கி உள்ளது.
மற்ற கவர் சாங்குகளைப் போல இல்லாமல், இதில் புதுமை என்னவென்றால், இதில் மலையாள மற்றும் தமிழ் வரிகள் கலவையாக இடம்பெற்று இருக்கும். பிரேமம் மலரும் ஜார்ஜும் சேர்ந்தது போல இதில் தமிழும் மலையாளமும் சேர்ந்து வந்துள்ளது. இந்த பாடலுக்கான தமிழ் வரிகளை கோயம்புத்தூரைச் சேர்ந்த கணினி கேம் தயாரிப்பாளர் எஸ் மதிவாணன் எழுதி உள்ளார்.
இந்த கவர் சாங்கில் இடம் பெற்றுள்ள புல்லாங்குழல் இசை, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் புதுச்சேரியைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பவர் மூலம் வாசிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் ரொமான்ஸ் வகையைச் சேர்ந்தது என்றாலும், புகைபிடிப்பது எவ்வளவு தவறு என்ற விழிப்புணர்வை இது கொடுக்கிறது.
தீ வண்டி படத்தில் இடம்பெற்றுள்ள "என்னாலே இனி மோன் வளி நிர்த்திக்கோ" என்ற பிரபலமான வரிகள் இந்த கவர் பாடலிலும் இடம் பெற்றுள்ளது.தமிழில் சொல்ல வேண்டும் என்றால், காதலி தன் காதலனைப் பார்த்து, அன்புடன், "மச்சான்..புகை பிடிப்பதை நிறுத்து" என்று கூறலாம். இன்று வெளியாகியுள்ள ஜீவாம்சமாய் கவர் பாடல் பற்றி உங்களுடைய கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications