தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' இசையமைப்பாளரான அந்த மிஸ்டர் எக்ஸ் யார் தெரியுமா?
சென்னை: எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளரான அந்த மிஸ்டர் எக்ஸ் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் இயக்குனர் கவுதம் மேனன்.
தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோரை வைத்து கவுதம் மேனன் இயக்கியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்தார் கவுதம்.

மறுவார்த்தை, நான் பிழைப்பேனோ ஆகிய பாடல்கள் வெளியாகியும் இசையமைப்பாளர் யார் என்பதை கவுதம் தெரிவிக்கவில்லை மிஸ்டர் எக்ஸ் என்று மட்டும் கூறினார். அவர் சஸ்பென்ஸாக வைத்திருந்தாலும் ரசிகர்கள் அந்த மிஸ்டர் எக்ஸ் யார் என்பதை கணித்துவிட்டனர்.

இந்நிலையில் மிஸ்டர் எக்ஸ் யார் என்பதை கவுதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மறுவார்த்தை பாடலின் வீடியோவை வெளியிட்டு அதன் மூலம் அந்த மிஸ்டர் எக்ஸ் டர்புகா சிவா என தெரிவித்துள்ளார் கவுதம்.


Click it and Unblock the Notifications











